Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை | முன்னிலை நிலவரம்!...

08:52 AM Jun 04, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிய நிலையில், தபால் வாக்குககளின் அப்டேட்கள், வேட்பாளர்களின் முன்னணி மற்றும் பின்னடைவு, பல்வேறு மாநிலங்களின் அப்டேட்கள் ஆகியவற்றை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 128; இண்டியா கூட்டணி 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது. இது இண்டியா கூட்டணிக்கு ஆரம்பகட்ட சறுக்கலாக அமைந்துள்ளது. 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Tags :
ADMKAnnamalaiBJPCongressDMKElections With News 7 TamilElections2024EPSINDIA Alliancem k stalinNarendra modiNDA allianceParliament Elections 2024Rahul gandhiSeeman
Advertisement
Next Article