“சற்றும் தாமதிக்காமல் அந்த பதவியில் இருந்து...” - அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி!
டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சரை சந்தித்த பிறகு, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி சென்ற அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தேர்தலில் போட்டிடமாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழலில் நேற்று(ஏப்ரல்.10) தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் விருப்பமனுதாக்கல் செய்வதற்கான அறிவிப்பு வெளியானது.
அறிவிப்பு வெளியானதையடுத்து நேற்றிரவே அமித்ஷா தமிழ்நாடு வந்தடைந்தார். தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை மறைவுக்கு அமித்ஷா நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதையடுத்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை சந்தித்து 1 மணி நேரத்திற்கு மேலாக பேச்சு வார்த்தை நடத்தினார். கிண்டி தனியார் ஹோட்டலில் இன்று(ஏப்ரல்.11) சந்தித்து பேசவுள்ளார். இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் போட்டிக்கு நயினார் நாகேந்திரன் விருப்பமனுத் தாக்கல் செய்தார். மேலும் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷாவை தமிழ்மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.கே.வாசன் அமித்ஷாவை சந்தித்தார். சந்திப்புக்கு பின் அவர் அளித்த பேட்டியில், “மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இன்றைய அரசியல் கள நிலவரம் தொடர்பாக அமித்ஷாவிடம் பேசினேன். மக்களை பல்வேறு தேவையற்ற விஷயங்களை கூறி திசை திருப்பி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் பொன்முடியின் பேச்சு அநாகரிகமானது அருவெறுப்பானது. சற்றும் தாமதிக்காமல் அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும் கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் அமித்ஷாவை சந்தித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெறுவது குறித்து அமித்ஷா செய்தியாளர் சந்திப்பை கவனித்தால் தெரியும்" என்று கூறினார்.