For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களையும் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா?" - மம்தா பானர்ஜி கேள்வி!

09:02 PM Apr 15, 2024 IST | Web Editor
 பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களையும் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா     மம்தா பானர்ஜி கேள்வி
Advertisement

பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா? என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அலிபுர்துவாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பேசியதாவது:

"தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏதேனும் ஒரு கலவரம் நடந்தால் கூட ஆணையத்திற்கு வெளியே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன். பாஜகவின் உத்தரவின் பேரில் முர்ஷிதாபாத் காவல்துறை துணை ஆணையரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இப்போது, முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் கலவரம் நடந்தால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பாகும். கலவரம் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில், போலீஸ் அதிகாரிகளை மாற்ற பாஜக விரும்புகிறது.

நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது. ஹெலிகாப்டரில் தங்கம் மற்றும் பணம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதாக கூறுகின்றனர். ஆனால், ஹெலிகாப்டரில் ஒன்றும் இல்லை என்பது சோதனைக்குப் பிறகு அவர்களுக்கு தெரியவந்தது. இதேபோல் தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபடும் பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா?

முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கும் சமயத்தில் தேசிய புலனாய்வு முகமை மூலம் எதிர்க்கட்சியினரை கைது செய்ய பாஜக நினைக்கிறது." இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டரும் சோதனைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement