பிரதமர் வேட்பாளரே இல்லாத கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? - அண்ணாமலை கேள்வி
பிரதமர் வேட்பாளரே இல்லாத கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
திருப்பூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து, பவானி சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது :
“இந்தியா வலிமை பெற வேண்டுமென்றால், இந்த தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழின் பெருமையை உலகெங்கும் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார். சாமானிய மக்களை கெளரவப்படுத்தும் பிரதமர் மோடிக்கு நாம் வாக்களிக்க வேண்டும். பிரதமர் வேட்பாளரே இல்லாத கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
திருப்பூர் தொகுதி அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல வேண்டுமென்றால் நீங்கள் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்ததிற்கு வாக்களிக்க வேண்டும். கடுமையான உழைப்பாளியாக இருக்கும் ஏ.பி.முருகானந்தத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் : ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும் 'Queen of Tears' - நெட்ஃபிளிக்ஸ் Top 10 பட்டியலில் முதலிடம்!
திருப்பூர் தொகுதியில் ஏ.பி.முருகானந்தம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. திருப்பூர் தொகுதிக்காக 100 வாக்குறுதிகளை ஏ.பி.முருகானந்தம் வைத்திருக்கிறார். வெற்றி பெற்றால் நிச்சயம் அவற்றை செயல்படுத்தி, திருப்பூர் மக்களின் சேவகனாக ஏ.பி.முருகானந்தம் இருப்பார்”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.