Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜகவை கண்டு இபிஎஸ் ஏன் பதுங்குகிறார்? கே.சி.பழனிசாமி கேள்வி!

02:01 PM Apr 01, 2024 IST | Web Editor
Advertisement

எடப்பாடி பழனிசாமி ஏன் பாஜகவை கண்டு பதுங்குகிறார்? என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைந்தது.  மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.  மார்ச் 30ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.  திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணியும்,  நாம் தமிழர் கட்சியும் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில்,  எடப்பாடி பழனிசாமி ஏன் பாஜகவை கண்டு பதுங்குகிறார்? என முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: 

எடப்பாடி பழனிசாமி ஏன் பாஜகவை கண்டு பதுங்குகிறார்? வலிமையோடு எதிர்த்து நிற்க துணிவு இல்லாமல் ஏன் அதிமுகவிற்கு தலைமை ஏற்கிறார்?  ஜெயலலிதா  கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  பிரதமர் மோடியும் அண்ணாமலையும் கச்சத்தீவு குறித்து பேசுகிற பொழுது அதில் அதிமுகவின் நிலைப்பாட்டையும் அம்மாவின் முயற்சி குறித்து சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இந்த தயக்கம்?  பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டு சென்றதற்கு  "ஜெயலலிதா அம்மாவின் கனவுகளை சிதைத்து பாவம் செய்கிறார்கள்" என்கிறார் பிரதமர் மோடி.  ஜெயலலிதா அம்மா தான் மோடியா? லேடியா? என்று பாஜகவையும் மோடியையும் எதிர்த்து களம் கண்டார் அந்த வழியில் நாங்கள் பயணிக்கிறோம் என்று மோடிக்கு பதில் சொல்ல பயப்படுவது ஏன்? ஜாதிகள் இல்லையடி பாப்பா , குலம் தாழ்த்தி , உயர்த்தி சொல்லல் பாவம் பாப்பா!"

பிரதமர்  பாரதியாரின் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று சொல்கிறார்.  ஆனால் பாரதியார் சொன்ன இந்த கருத்து அவருக்கு புரியவில்லையா? அல்லது தெரியவில்லையா?

அண்ணாமலை  நல்ல சாதிய பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறார் என்றால் மற்ற சாதிகளெல்லாம் நல்ல சாதிகள் இல்லையா? சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம் அதிமுக.  அதன் சார்பாக கருத்து தெரிவிக்க ஏன் இபிஎஸ்  தயங்குகிறார்?

கருப்பு பணத்தை ஒழிக்க 2016-ல் "Demonetization" கொண்டுவந்தார் பிரதமர் மோடி அதன் மூலம் கருப்பு பணத்தை ஒழித்துவிட்டாரா? ஒவ்வொரு குடும்பமும் வீட்டில் சிறுக சிறுக சேர்த்துவைத்த பணத்தை ஒரே இரவில் செல்லாது என்று சொன்னார்.  இதில் ஏழைகளும் நடுத்தர குடும்பத்தினரும் தான் பாதிக்கப்பட்டார்கள்.  கார்ப்பரேட்களுக்கு இதில் பாதிப்பும் ஏற்படவில்லை.  இன்று அவர்களின் கருப்பு பணத்தில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவும், திமுகவும் பங்கு வாங்கியிருக்கிறது.  ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 200 கோடி கறுப்புப்பணம் செலவிடப்படுகிறது.  அப்படி பார்த்தால் நாடுமுழுவதும் கருப்புப்பண புழக்கம் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடியாக உள்ளது.

கருப்புப்பணத்தை ஒழிக்க தவறிய பாஜக  குறித்து பேசவும் EPS தயங்குகிறார்.  "அண்ணாமலைக்கு பணம் சம்பாரிக்க ஆசை இல்லை என்பதால் தான் பாஜகவில் இணைந்துள்ளார் என்கிறார் மோடி" ஆனால் ஒரு IPS அதிகாரி கட்சியில் இணைந்ததும் தலைவராக்கப்படும் அளவிற்கு திராவிட கட்சிகளில் தலைமைக்கு பஞ்சம் ஏற்படவில்லை என்பதை உணர்த்த தவறிவிட்டார்கள்.  தான் செய்கிற செயல் எல்லாமே வாக்குக்காகவும், ஆட்சிக்காகவும் தான் செய்கிறேனா" என்கிறார் பிரதமர் மோடி.  கடந்த 4 மாதங்களில் மட்டும் 7 முறை தமிழகம் வந்திருக்கிறார்.  ஆனால் இந்த 10 வருட ஆட்சியில் எத்தனை முறை தமிழகம் வந்திருக்கிறார்? இந்த 10 ஆண்டு ஆட்சியில் பாஜக அரசால் தமிழகத்திற்கு என்று தனித்துவமிக்க பெரிய திட்டங்கள் என்ன கொண்டுவரப்பட்டிருக்கிறது.  தமிழகம் பல வகைகளில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது மற்றும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

இபிஎஸ்  பாஜகவை சேர்ந்த ராம ஸ்ரீனிவாசனுக்கு பதில் சொல்லும் வேகத்தையும், ஆக்ரோசத்தையும் மோடியிடம் காட்ட வேண்டும்.  அப்பொழுது தான் நீங்கள் பாஜகவை எதிர்த்து களம் காணுகிறீர்கள் என்று மக்கள் நம்புவார்கள்.

Tags :
ADMKAIADMKAnnamalaiCongressEdapapdi PalanisamyElection2024Elections 2024JayalalithaJayalalithaaKatchatheevu Islandmoditamil nadu
Advertisement
Next Article