For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? - யுவராஜா விளக்கம்!

02:53 PM Feb 26, 2024 IST | Web Editor
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்    யுவராஜா விளக்கம்
Advertisement

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

Advertisement

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், தமாகாவின் இளைஞரணி தலைவர் யுவராஜா, சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்தார்.  இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது: 

“கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமாகா, அதிமுக கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்னைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம். அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம். தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்.

காமராசர், மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement