For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மோடி அரசு வெளியிட்டது வெள்ளை ‘பொய்’ அறிக்கை - காங்கிரஸ் விமர்சனம்!

08:53 PM Feb 09, 2024 IST | Web Editor
மோடி அரசு வெளியிட்டது வெள்ளை ‘பொய்’ அறிக்கை   காங்கிரஸ் விமர்சனம்
Advertisement

‘பொருளாதாரம் குறித்த மோடி அரசின் வெள்ளை அறிக்கை, ஒரு வெள்ளை பொய் அறிக்கை’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "அது வெள்ளை அறிக்கை இல்லை, வெள்ளை பொய் அறிக்கை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கருப்பு அறிக்கையை வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கைக்கான பதில் அந்தக் கருப்பு அறிக்கையில் உள்ளது. கருப்பு அறிக்கை, அரசின் வெள்ளை அறிக்கைக்கான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.

பணமதிப்பிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவை பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. சீனாவுடனான எல்லைப் பிரச்னை, எல்லைப் பதற்றம் போன்ற விவாகாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் கோரி வருகிறோம். அவர்கள் அமைதி காக்கிறார்கள்.

மணிப்பூர் விவகாரம் குறித்தும் நாங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். முன்பு பணமதிப்பிழப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரினோம். அப்போதும் மௌனம் காத்தார்கள். நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. இந்த வெள்ளை அறிக்கையும் மற்றொரு நிகழ்வு ஆகும். எல்.கே.அத்வானி சொன்னது போல மோடி ஒரு நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்.

ஊழல் மற்றும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு எதிரான அநீதிகளில் அரசு மௌவுனம் காக்கிறது,.பொதுத்துறை நிறுவனங்கள் அவரது ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுக்கு விற்கப்படுகின்றன. அவர் துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே, தொழில்சாலைகள், எண்ணைய் சுத்திகரிப்பு நிலையங்களை தனியாருக்கு விற்றுவிட்டார்” என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, யுபிஏ தலைமையிலான அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை மோடி அரசின் கருப்பு உண்மையை மறைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement