For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும்! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

09:50 PM Jun 01, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும்  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பார்க்கலாம்.

Advertisement

நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

ரிபப்ளிக் டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி,

  • பாஜக தலைமையிலான ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 353 - 368 இடங்கள்,
  • காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ --> 118 - 133 இடங்கள்,
  • இதர கட்சிகள் --> 43 - 48 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 0 - 3 இடங்களிலும் (31.9% வாக்குகள்), காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 35 - 38 இடங்களிலும் (50.4% வாக்குகள்), அதிமுக கூட்டணி 0 - 1 இடங்களிலும் (16.1% வாக்குகள்), வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 0 - 3 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 35 - 38 இடங்கள்
  • அதிமுக கூட்டணி --> 0 - 1 இடம்
  • இதர கட்சிகள் --> 0 இடம்

உத்தர பிரதேசம்:

அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (55.6% வாக்குகள்) 69 - 74 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ (33.5% வாக்குகள்) 6 - 11 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (8.2% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 69 - 74 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 6 - 11 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 29 இடங்களிலும் (45% வாக்குகள்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 19 இடங்களிலும் (41% வாக்குகள்) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (14% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 29 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 19 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0

கர்நாடகம்:

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 21 இடங்களிலும் (52% வாக்குகள்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 7 இடங்களிலும் (42.2% வாக்குகள்) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (6.8% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 21 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 7 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0

தெலங்கானா:

தெலங்கானாவில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 8 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 7 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 8 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 7 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 1

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 22 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 22 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 3 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0

ஒடிஸா:

ஒடிஸாவில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 9 - 12 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஜு ஜனதா தளம் 7 - 10 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 9 - 12 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 1 இடங்கள்
  • பிஜு ஜனதா தளம் --> 7 - 10 இடங்கள்

பஞ்சாப்:

பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 10 இடங்களிலும், இதர கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 2 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 10 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 1

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 22 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 22 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 1 இடங்கள்
  • திரிணமூல் காங்கிரஸ் --> 19

தில்லி:

தில்லியில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 - 7 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 5 - 7 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி(ஆம் ஆத்மி - காங்கிரஸ்)’ --> 0 - 2 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0

பிகார்:

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 37 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ -->37 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ -->3 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 28 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 28 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 1 இடம்
  • இதர கட்சிகள் --> 0

கோவா:

கோவாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 2 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 1 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0

அஸ்ஸாம்:

அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 10 - 12 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 10 - 12 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 0 - 2 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0 - 2 இடங்கள்

ஹிமாசல பிரதேசம்:

ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 - 4 இடங்களிலும் (58.8% வாக்குகள்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 1 இடத்திலும் (38.6% வாக்குகள்) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (2.6% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 3 - 4 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 0 - 1 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0

கேரளம்:

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 இடங்களிலும், கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’ஐக்கிய ஜனநாயக முன்னணி(காங்கிரஸ்)’ --> 17 இடங்கள்
  • ’இடதுசாரி ஜனநாயக முன்னணி(கம்யூனிஸ்ட்)’ --> 3 இடங்கள்
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி(பாஜக) --> 0

திரிபுரா:

திரிபுராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 2 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 0 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0 இடங்கள்

அருணாசல பிரதேசம்:

அருணாசல பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 2 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 0 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0 இடங்கள்

மணிப்பூர்: மணிப்பூரில் மொத்தமுள்ள 2 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ ஒரு இடத்திலும், இதர கட்சிகள் ஒரு இடத்திலும், வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 0 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 1 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 1 இடங்கள்

குஜராத்:

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 24 - 26 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 24 - 26 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 0 - 2 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0

ஜார்க்கண்ட்:

ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 10 - 12 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 2 - 4 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

  • ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 29 இடங்கள்
  • ’இந்தியா கூட்டணி’ --> 19 இடங்கள்
  • இதர கட்சிகள் --> 0
Tags :
Advertisement