"அந்நியனின் ஆட்சி வரும் போது ஒரு நாடு பாரம்பரியத்தை இழக்கிறது" - குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!
டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தபால் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவான்ஸ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது நிகழ்த்தியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "தமிழ்நாட்டின் மத்திய பகுதிகளை ஆண்டு தோல்வியே காணாத மன்னருக்கு இப்படியான ஒரு தபால் தலை வெளியிடுவது மிகவும் முக்கியம். விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் பல மன்னர்கள், தலைவர்கள் சிறப்பு செய்யப்படவில்லை, வெளியில் தெரியவில்லை. ஆனால் நாட்டிற்காக தியாகம் செய்தவர்களை, பெருமை சேர்த்தவர்களை பிரதமர் மோடி அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றுள்ளார்.
நாட்டிற்காக தியாகம் செய்தவர்களை, பெருமை சேர்த்தவர்களை அப்படியான தலைவர்களை பற்றிய புத்தகங்களை டிஜிட்டல் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தபால் தலை எப்போதே தயார் ஆகிவிட்டது . ஆனால் தெய்வத்தின் செயலால் குடியரசு துணை தலைவராக தமிழர் ஒருவர் வந்த பிறகு இந்த தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. தெய்வீகத்தை திருப்பி திருப்பி நிராகரிப்பவர்கள் தமிழர்கள் அல்ல. நாம் இதுபோன்ற விசயங்களை அனைவரிடமும் எடுத்து சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "இந்த நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் கலந்து கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும்பிடுகி இந்த நினைவு அஞ்சல் தலையை வெளியிடுவதால் அஞ்சல் துறை பெருமை கொள்கிறது, நாடே பெருமை கொள்கிறது. இந்த பெருமைக்கு காரணம் நமது பிரதமர் மோடி தான்.
தமிழ் தாயின் இதயமான திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை 45 ஆண்டுகள் வரை தோல்வியே காணாமல் ஆட்சி செய்தவர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர். 14 போரில் பங்கேற்று தோல்வியே காணதவர்நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள், பெருமை சேர்த்தவர்கள் அனைவரையும் நாட்டு மக்கள் அறியவேண்டும்.
ஒரு நாடு எப்போது பாரம்பரியத்தை இழக்கிறது என்றால் அந்நியனின் ஆட்சி வரும் போது பாரம்பரியத்தை இழக்கிறது. ஆங்கிலேய அட்சியில் நாம் இழந்த பெருமைகளை நமது பிரதமர் மோடி மீட்டெடுத்து வருகிறார். அதன் மூலம் புது இளைஞர்களுக்கு தேச பக்தியை ஊட்டி வருகிறார். வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 652க்கும் மேற்பட்ட நமது சிலைகள் வெளி நாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது.
காசி தமிழ் சங்கமம் 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நமது தமிழினர பெருமைகளை வட நாட்டவர்களும் தெரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு தமிழ் கலாசார பாரம்பரியம், அங்கிகாரம் நாடு முழுவதும் கிடக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணம். இந்த ஆண்டு காசி தமிழ் சங்கத்தின் நிறைவு விழா ராமேஷ்வரத்தில் நடக்க வேண்டும். ஒன்றே பாரதம், ஒன்றே நாடு, ஒன்றே மக்கள்.... நன்றி என்று தெரிவித்துள்ளார்.