"விஜய் அண்ணன் அண்ணன் தான்... சிவகார்த்திகேயன் தம்பி தம்பிதான்" - நடிகர் சூரி!
மதுரை மாட்டுத்தாவணியில் அம்மன் உணவகத்தை திறந்து வைத்த பின் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மதுரையில் 12 வது அம்மன் உணவகத்தின் கிளையை மாட்டுத்தாவணியில் திறந்து வைத்துள்ளேன்.முழுக்க முழுக்க என் குடும்பத்தின் ஆதரவின் காரணமாக உணவகத்தை நடத்தி வருகிறேன்.
SK வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த சூரி, "யாருக்கும் யாரும் போட்டி கிடையாது. விஜய் அண்ணன், விஜய் அண்ணன் தான். SK தம்பி, SK தம்பி தான். எல்லோருக்கும் மக்கள் ஆதரவு உள்ளது. விஜய் அண்ணன் உச்சத்தில் உள்ளார். தம்பி சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார்".
சமீபத்தில் நடிகர் அஜித்துடன் சந்தித்து என்ன பேசினீர்கள்? என்ற கேள்விக்கு, "நாம் எப்படி இருக்கோமோ, எங்கிருந்து தொடங்கினோமோ, அதேபோல் இருந்தாலே நம் வளர்ச்சி நன்றாக இருக்கும்".
போட்டியாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? என்ற கேள்விக்கு, "யாருக்கும் யாரும் போட்டியாளர்கள் இல்லை. தங்களது வேலையை திறம்பட செய்தாலே எல்லாம் சரியாக இருக்கும். இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது.
நான் எனது முழு உழைப்பை அதில் போட்டுள்ளேன். மீனவர்கள் குறித்து பேசும் இதுபோன்ற கதையை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் விரைவில் வெளியாகும். அதேபோல இயக்குநர் ராம் உடன் ஒரு படம் தயாராகி கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.