Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அடகு கடை வாசலில் நிற்பவர்கள் என்ன நிபந்தனை வைக்க முடியும்?” - அதிமுக மீது கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்!

அடகு கடை வாசலில் நிற்பவர்கள் என்ன நிபந்தனை வைக்க முடியும்? என அதிமுக-வை கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.
08:30 PM Apr 11, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது. “தன்னுடைய இயக்கத்தை மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்(இபிஎஸ்) செய்திருக்கும் மிகப்பெரிய துரோகமாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. இதைத்தான் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அவர்கள் பிரிந்துவிட்டதாக சொன்னாலும் தொடர்பிலேயே இருக்கிறார்கள் என்றார். அந்த உண்மை இன்று வெளிப்பட்டுள்ளது. மக்களை அவர்கள் வெகு நாள் ஏமாற்ற முடியாமல் வெளிப்படையா கூட்டணியை அறிவிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

காசி தமிழ் சங்கமத்தை நடத்தி, அதை தமிழுக்கு ஆற்றிய தொண்டு என சொல்கிறார்கள், ஆனால் அது காசிக்கு தமிழ் செய்துள்ள நம்மையாக எடுத்துக்கொள்ளாமே தவிர அதனால் தமிழ் எப்படி வளர்கிறது என்று தெரியவில்லை. சமஸ்கிருதம் மொழிக்கு கிட்டத்தட்ட ரூ. 2400 கோடிக்கும் மேல் மத்திய அரசு செலவழிக்கிறது. ஆனால் இவர்கள் வளர்ப்பதாக சொன்ன தமிழுக்கு ரூ.100 கோடி கூட ஒதுக்கீடு செய்யவில்லை. இப்படி பாரபட்சமாக நடந்துகொள்ளும் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடக்க கூடிய கேந்திரிய வித்யாலயாவில் கூட தமிழ் சொல்லிக்கொடுப்பதற்கு நிரந்தர ஆசிரியர்களை ஏற்படுத்திக்கொடுப்பதில்லை, இப்படி இருக்க தமிழுக்காக என்ன தொண்டு  அவர்கள் செய்துவிட முடியும்?

பிரதமர் மோடி எங்கேயாவது போகும்போது திருக்குறளை சொல்வதை தமிழ் மொழியை வளர்க்கும் முயற்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழுக்காக என்ன செய்துள்ளார்கள்? இந்தி மொழியை தொடர்ந்து திணிப்பதை தவிர தமிழுக்காக எதையும் செய்தது கிடையாது. மும்மொழிக் கொள்கையை திணிப்பது, நிதியை நிறுத்தி வைத்து நமக்கு தர மாட்டேன் என்று சொல்வதாக இருக்கட்டும், இப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிற வக்ஃப் திருத்த சட்டமாக இருக்கட்டும், யார் மசோதாவை நிறைவேற்றினார்களோ அவர்களுடனே அந்த மேடையில் அவர்(இபிஎஸ்) அமர்ந்து கொண்டிருக்கிறார். முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை தரைகுறைவாக பேசிய தலைவரோடு அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் அறிவிக்க அவர் அமைதியாக அமர்ந்துகொண்டிருக்கிறார்.

யாருடைய தலைமையில் கூட்டணி அமைகிறதோ அவர்தான் அந்த கூட்டணி குறித்து அறிவிப்பார்கள், பேசுவார்கள். இன்றைக்கு பேசக்கூடிய உரிமை கூட அவருக்கு இல்லாத ஒரு நிலையில் கூட்டணி அறிவிக்கப்படுகிறது. தங்களுடைய தலைவர்களை இழிவாக பேசிய ஒருவருடன் அமர்ந்து கொண்டு அந்த கூட்டணியை இபிஎஸ் ஏற்றுக்கொள்கிறார். அதே தலைவர்களை அழைத்து விருந்து அளிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இது கட்சி மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திருக்கும் மிகப்பெரிய துரோகம். அதனால் இதற்கு தகுந்த பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் சொல்லித் தருவார்கள்.

சிறுபான்மையினர் எந்த காலத்திலும் அவர்களை நம்பியது இல்லை. தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருகும் பாஜகவுக்கும் மத்திய அரசுக்கும் தங்களால் முடிந்த  ரத்தின கம்பளத்தை அவர்கள் விரித்திருக்கிறார்கள். பாசிச அரங்கத்தை தடுத்து நிறுத்தகூடிய முக்கிய மாநிலமாக தமிழ்நாடு செயல்பட்டு  கொண்டிருக்கும் வேலையில், மக்கள் நிராகரித்திருப்பவர்களுக்கு கதவுகளை திறந்துவிடும் முயற்சியை அதிமுக செய்து வருகிறது. இதற்கு தகுந்த பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் சொல்லித்தருவார்கள்.

பாஜக நாடுமுழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஐடி, அமலாத்துறை, சிபிஐ இது மூன்றையும் அவர்களை அடக்குவதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கிட்ட தட்ட 95 % அமலாக்கத்துறை வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது போடப்படுகிறது. ஆனால் அதில் தண்டனை சதவீதத்தை எடுத்துக்கொண்டால் 2 % கூட தொடுவதில்லை. இதன் மூலம் அவர்கள் எந்த அளவிற்கு பொய்யான வழக்குகளை அவர்கள் போடுகிறார்கள் என்பதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. அதே வழியில் தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்களை அவர்கள்(பாஜக) மிரட்டிவிடலாம் என தப்பு கணக்கு போடுகிறார்கள்.

தங்களுடைய ஆட்சியில் செய்யும் தவறுகளை திசை திருப்ப இப்படிப்பட்ட வழக்குகளை போடுகிறார்கள். திமுக திசை திருப்பவில்லை முதலமைச்சரின் திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது. திமுக ஆட்சிக்கு நல்ல வரவேற்புள்ளது. வரும் தேர்தல் முடிவுகளில் அதை நாம் தெளிவாக பார்க்க முடியும். அடகு கடை வாசலில் நிற்பவர்கள் என்ன நிபந்தனை வைக்க முடியும். பேசக்கூட அவருக்கு(இபிஎஸ்) உரிமை இல்லாதபொது யாருடைய தலைமையில் கூட்டணி என்று நன்றாகவே தெரிகிறது”

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKamit shahBJPDMKEPSKanimozhinda
Advertisement
Next Article