For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு? நயினார் நாகேந்திரன்!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியைப் பார்வையிட சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
04:42 PM Nov 11, 2025 IST | Web Editor
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியைப் பார்வையிட சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு  நயினார் நாகேந்திரன்
Advertisement

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "போலி வாக்காளர்களைக் கண்டறியும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணியைக் கண்மூடித்தனமாக எதிர்த்து வரும் திமுக அரசு, தமிழகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி SIR பணிகளை முடக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

அதாவது பல மாநில மக்கள் வசித்து வரும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தமிழில் மட்டுமே வாக்காளர் படிவங்கள் வழங்கப்படுவதாகவும், 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள சென்னையில் படிவங்கள் பற்றாக்குறையால் இதுவரை 6.4 லட்சம் படிவங்கள் மட்டுமே விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும், சில வாக்குச்சாவடி ஊழியர்கள் ஒரே நாளில் 500 வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தால் வாட்ஸ்ஆப் மூலம் படிவங்கள் அனுப்பப்படுவதாகவும், படிவங்களை நிரப்பத் தெரியாமல் சிரமப்படும் முதியவர்கள் மற்றும் பாமர மக்களுக்கு ஊழியர்கள் உதவுவதில்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அதிலும் குறிப்பாக அரசு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகத் திமுக தொண்டர்களும், திமுகவிற்கு விசுவாசமாக இருப்பவர்களும் நியமிக்கப்படுவதால் இந்தப் பணி நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுக்கத் துவங்கியுள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதிலும் போலி வாக்குகள் போடுவதிலும் பெயர் போன திமுகவின் இந்தத் தில்லுமுல்லுகளால் தங்கள் ஓட்டுரிமை பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாக்குச்சாவடி அலுவலர்களை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர்.

எனவே, இந்த விஷயத்தில் உடனடியாகத் தமிழகத் தேர்தல் கமிஷன் தலையிட்டு, தமிழகத்தில் நடந்துவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியைப் பார்வையிட சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் எனவும், அரசு அதிகாரிகளையும் நடுநிலையானவர்களையும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகப் பணியமர்த்த வேண்டுமெனவும் பாஜக சார்பாக வேண்டுதல் விடுக்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement