For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"295 இடங்களை பெறுவோம் ; இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி" - ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

06:10 PM Jun 01, 2024 IST | Web Editor
 295 இடங்களை பெறுவோம்   இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி    ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
Advertisement

"295 இடங்களை பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி" என இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன.  இதில் மொத்தம் 485 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.  இந்நிலையில் இன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  இதனுடன் 18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில்,  இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1 ஆம் தேதியான இன்று நடைபெறும் என முன்பே அறிவிக்கப்பட்டது.  இதனையொட்டி கூட்டணியில் உள்ள 28 கட்சிகளுக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என தகவல் வெளியானது.  இன்றுடன் (ஜூன் 1) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நிறைவடைய உள்ள நிலையில் இக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக திமுக பொருளாளார் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு பின் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இடதுசாரி தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொண்டனர்.  கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது..

” தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித்து விவாதித்தோம். பாஜக எப்படி எல்லாம் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது என்பதை மக்களிடம் எடுத்து சென்றுள்ளம். பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று கருத்து கணிப்பு குறித்து அதிகம் விவாதிப்பார்கள். ஆனால், 295 இடங்களைப் பெற்று இந்தியா கூட்டணி குறைந்த பட்சம் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி.

பாஜக ஆட்சி அமைப்பது சிரமம் என அரசு நிறுவனங்கள் கூட கணித்து கூறியுள்ளது. ஊடகங்கள் செய்யும் அதீத HYPE தான் பா.ஜ.க.வுக்கு பிம்பம் கொடுத்துள்ளது. எக்காரணத்தை கொண்டு வாக்கு எண்ணிக்கை முடிந்து சான்றிதழ் பெறும் வரை மையத்தை விட்டு வேட்பாளர்களும் முகவர்களும் வெளியே வர கூடாது என முடிவெடுத்துள்ளோம். வெற்றி சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை இடத்தை விட்டு நகரக்கூடாது. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. மக்கள் அளித்த உண்மையான கருத்து கணிப்பு எங்களிடம் உள்ளது. அரசு தானே எடுத்த கருத்து கணிப்பு அவர்களிடம் உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Tags :
Advertisement