For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கட்சியை வலுப்படுத்தி வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்” - செல்வப்பெருந்தகை பேச்சு!

04:06 PM Jun 11, 2024 IST | Web Editor
“கட்சியை வலுப்படுத்தி வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்”   செல்வப்பெருந்தகை பேச்சு
Advertisement

காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் எனவும், வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 11) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.எஸ் அழகிரி, இ.வி.கே.எஸ்.இளங்கோவன்,  தங்கபாலு, பீ ட்டர் அல்போன்ஸ் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழா மேடையில் செல்வப் பெருந்தகை பேசியதாவது,

நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிமுகப்படுத்தவும், நம்முடைய வேலை என்ன என்று அறிய இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம். தமிழ் உலகத்திற்கு வழி காட்டியாக உள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை வீழ்த்த தமிழ்நாடு உதவியாக இருக்கும். பாசிசத்தை வீழ்த்துவது நம் அனைவரின் கடமை. ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

மத்தியில் ஆட்சி அமைத்த கட்சி இன்று மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் அதிகாரப்பசியில் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய காத்திருக்கிறார்கள். ராஜிவ் காந்தி,  இந்திரா காந்தி வழியே ராகுல் காந்தி இருக்கிறார்.  இந்தியாவில் முதன்மை கட்சியாக காங்கிரஸ் மாற வேண்டும்.  நாம் தனியாக இருக்க வேண்டுமா? அல்லது யாரையாவது சார்ந்து இருக்க வேண்டுமா என்பது குறித்த முடிவு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி 16 முறை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுக தற்போது எத்தனை சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ளது என்று பார்க்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன வழிகாட்டல் செய்யப் போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்பது கட்சிக்கு தேவையான ஒன்று.

இனிவரும் காலங்களில் காங்கிரஸுக்கு உண்மை, உழைப்பு, ஒற்றுமை தேவை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பற்று அன்பு எனக்கு மிகுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் தொலைபேசி வாயிலாக தினமும் பேசுவார். அவர் மீது மரியாதை வைத்திருக்கிறோம். திமுகவிற்கு ஆதரவாக முதலில் குரல் கொடுப்பது காங்கிரஸ் தான். உண்மையான தோழமையாக இருக்கிறோம்.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான கொள்கை சித்தாந்தம் கோட்பாடுகள் வேறு. காமராஜர் ஆட்சி பற்றி பேச வேண்டாம் என்றால் அது தவறு. காங்கிரஸ் கட்சியும் நீட்டை எதிர்க்கிறது. நாம் வாக்கு வங்கியை நோக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கூட்டணி கட்சிகள் சரியான இடம் ஒதுக்கவில்லை என பிரச்னை எழுகிறது. குரலற்றவர்களுக்காக குரல் கொடுக்க தான் காங்கிரஸ் இருக்கிறது. உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவிகளும், பட்டங்களும் கண்டிப்பாக கிடைக்கும்.

நாம் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் யாரையும் வெறுப்போடு பார்க்க வேண்டாம். ஒற்றுமையுடன் பார்க்க வேண்டும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டாம். உண்மையான உழைப்பாளர்களை இந்த கட்சி என்றுமே கைவிடாது. காங்கிரஸ் ஒரு குடும்பம். ஒரு யாத்திரையை தொடங்குவோம். காங்கிரஸ் தலைவர்களின் கால் படாத இடம் கிடையாது என்ற சொல் வரும் வரை பாதயாத்திரை மேற்கொள்வோம்”

இவ்வாறு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.

Tags :
Advertisement