For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“புத்தாண்டு முதல் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்”... கெஜ்ரிவாலுக்கு பாஜக கடிதம்!

04:32 PM Jan 01, 2025 IST | Web Editor
“புத்தாண்டு முதல் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்”    கெஜ்ரிவாலுக்கு பாஜக கடிதம்
Advertisement

“டெல்லி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டேன் என புத்தாண்டில் கெஜ்ரிவால் உறுதிமொழி ஏற்க வேண்டும்” என பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் அடுத்த மாதம் பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆம் ஆத்மி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் வார்த்தைப் போரும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், “டெல்லி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டேன் என புத்தாண்டில் கெஜ்ரிவால் உறுதிமொழி ஏற்க வேண்டும்” என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது. மேலும் புத்தாண்டு முதல் பொய் சொல்வதை கெஜ்ரிவால் நிறுத்தி விடுவார் என டெல்லி மக்களும் நம்புகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடித்ததில்,

“பாஜகவின் தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா?. பாஜக வெளிப்படையாக பணத்தை விநியோகம் செய்கிறது. காசுக்கு ஓட்டு வாங்குவதையும் ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? தலித் மற்றும் பூர்வாஞ்சலி மக்களை வாக்களர் பட்டியலில் இருந்து நீக்க பாஜக முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு சரியானது என ஆர்எஸ்எஸ் நம்புகிறதா? இது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் செயல் என தோன்றவில்லையா? பாஜக செய்யும் அனைத்து தவறுகளும் உங்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;

அரவிந்த் கெஜ்ரிவால் பொய்களை நிறுத்திவிட்டு, நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும். சிறுவயதிலிருந்தே புத்தாண்டு தினத்தில் தீய பழக்கங்களை விட்டுவிட்டு, நல்லதையும் புதியதையும் செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் எடுப்போம். 2025 புத்தாண்டான இன்று டெல்லி மக்களும் அதை செய்வீர்கள் என நம்புகிறோம். மதுவை ஊக்குவித்ததற்காக டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் ஐந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

டெல்லியின் பெண்கள், பெரியவர்கள் மற்றும் மத சமூகங்களின் உணர்வுகளுடன் விளையாடும் வகையில், பொய் வாக்குறுதிகளை அளிப்பதை ஆம் ஆத்மி தலைவர் நிறுத்த வேண்டும். உங்கள் குழந்தைகள் மீது இனி ஒருபோதும் பொய் சத்தியம் செய்ய மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். யமுனையை சுத்தம் செய்வேன் என பொய் வாக்குறுதியை வழங்கியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். புத்தாண்டில் பொய் சொல்வதை கெஜ்ரிவால் நிறுத்திவிடுவார் என டெல்லி மக்கள் நம்புகின்றனர். அரசியலுக்காக தேச விரோத சக்திகளின் நன்கொடைகளை திரட்டவோ அல்லது ஏற்கவோ மாட்டார் என்று நம்புகிறேன்.

டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டார். புதிய ஆண்டில் கெஜ்ரிவால் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement