For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”திமுகவை விட நாங்கள் பலமாக இருக்கிறோம்”- தமிழிசை சௌந்தர்ராஜன்

தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கிறது. திமுக விட நாங்கள் பலமாக இருக்கிறோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவிதுள்ளார்.
09:47 PM Jul 20, 2025 IST | Web Editor
தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கிறது. திமுக விட நாங்கள் பலமாக இருக்கிறோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவிதுள்ளார்.
”திமுகவை விட நாங்கள் பலமாக இருக்கிறோம்”  தமிழிசை சௌந்தர்ராஜன்
Advertisement

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தினமலர் நிறுவனர் T.V.ராமசுப்பையர் அவர்களின் 41 வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisement

”அமித்ஷா எடப்பாடி அவர்களும் அமர்ந்து எத்தனை இடங்கள் எப்படி, எந்த அணியை முன்னெடுத்துச் செல்வது எப்படி இதை அமைப்பது என்பதையெல்லாம் அவர்கள் முடிவு செய்வார்கள். தலைவர்களின் பேச்சுக்கு விளக்கம்  கொடுப்பதற்கு நாங்கள் இல்லை. என்றார்.

மேலும் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கிறது. நிச்சயமாக அது பலமடையும். நிச்சயமாக அது வெற்றி பெறும். திமுகவுக்கு 100 ஓட்டு விழுந்ததால் அதில் 30 ஓட்டு எங்களுக்கு இன்று திருமாவளவன் கூறுகிறார். திமுக ஓட்டு போனா கூட நாங்க பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திமுக விட நாங்கள் பலமாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement