”மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விமான நிலையம் அமைத்தால் நல்லது” - விஜய் பேச்சு
தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அவர் கரூரில் உள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் பகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் ஊர் கரூர். டெக்ஸ்டைல்ஸ் அதிகளவில் உள்ளது. கரூர் தற்போது இந்தியா அளவில் பேசப்படுறது அதற்கு யார் காரணம் சொல்லுகிறேன். கரூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள்; ஆட்சியே முடியப்போகுது, இப்போது போய் மத்திய அரசிடம் விமான நிலையம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்; மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விமான நிலையம் அமைத்தால் நல்லது.
மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி; சட்டவிரோத கல் குவாரி கரூரை அழிக்கிறது; இதுக்கு காரணம் யார் CM சார்? 11 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டால், 11.05-க்கு மணல் கொள்ளை அடிக்கலாம் என சொன்னவங்கதான உங்க ஆளுங்க. பஞ்சப்பட்டி ஏரியை சீரமைக்காமல் வைத்துள்ளனர்; தவெக ஆட்சியில் இந்த ஏரிக்கு உயிர் வரும். கரூர் மாவட்டத்தில் மந்திரி இல்லை. ஆனால் மந்திரி மாதிரி. பாட்டிலுக்கு பத்து ரூபா என்று பாட்டு பாடுகிறார். திமுக குடும்பத்திற்கு ஊழல் பணத்தை 24/7 கொடுக்கிறார்’ என்று பேசினார்.
அப்போது விஜய் பேச்சின் இடையில் தொண்டர்கள் சிலர் மயங்கி விழுந்தார். இதனால் பாதியில் தனது பேச்சை முடித்து கொண்டார்.