Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா அவதூறு பேசியதற்கு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டதா?
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறு பேசியதற்கு நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது என இணையத்தில் வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
10:34 AM Jan 09, 2025 IST | Web Editor
Advertisement
This News Fact Checked by ‘PTI’
Advertisement
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறு பேசியதற்கு நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது என இணையத்தில் வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது, அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், அம்பேத்கரின் படங்களுடன் ஏராளமானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்த விசாரணையில் வைரலான வீடியோவுடன் வைரலாகும் பதிவு போலியானது என கண்டறியப்பட்டது. 2022 குடியரசு தின விழாவில் மேடையில் காந்திஜியின் புகைப்படத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் புகைப்படத்தை கர்நாடகாவில் மாவட்ட நீதிபதி ஒருவர் அகற்றியதாக விசாரணையில் தெரியவந்தது. இதனால் கோபமடைந்த மக்கள் பிப்ரவரி 19, 2022 அன்று பெங்களூருவில் நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உரிமைகோரல்:
டிசம்பர் 20 அன்று, சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் ஒரு பயனர் வைரல் வீடியோவைப் பகிர்ந்து, “அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டில் #தொடங்கிய #நெருப்பு தற்போது #எரிமலையாக மாறி இந்த #எரிமலை #உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் #பாபா_சாகேப்_அம்பேத்கர்_ஜியை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்” என பதிவிடப்பட்டுள்ளது. பதிவின் இணைப்பு, காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை இங்கே பார்க்கவும்.
மற்றொரு பயனர் டிசம்பர் 21 அன்று இதே உரிமைகோரலுடன் பேஸ்புக்கில் வைரலான வீடியோவை வெளியிட்டார். பதிவு இணைப்பு, காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே பார்க்கவும்.
உண்மை சரிபார்ப்பு:
உரிமைகோரலை சரிபார்க்க, வைரலான வீடியோவின் 'கீ பிரேம்களின்' தலைகீழ் படத் தேடல் செய்யப்பட்டது. அங்கு 'தி நியூஸ் மினிட்' இணையதளத்தில் 20 பிப். 2022 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை கிடைத்தது. அதிலும், வைரலான வீடியோ காட்சி இருந்தது. அறிக்கையின்படி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மல்லிகார்ஜுன் கவுடா, ராய்ச்சூரில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன்பு மகாத்மா காந்தியின் அருகில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்தை அகற்ற உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக பெங்களூருவில் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 19 பிப்ரவரி 2022 அன்று, நீதிபதி மல்லிகார்ஜுன் கவுடா இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. அறிக்கையின் இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே பார்க்கவும்.
மேலும் விசாரணையில், 21 பிப்ரவரி 2022 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கிடைத்தது. அந்த அறிக்கையில் வைரலான வீடியோவின் காட்சி உள்ளது. அப்போது போராட்டக்காரர்களுடனான சந்திப்பின் போது, முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி மல்லிகார்ஜுன் கவுடா மீது நடவடிக்கை எடுப்பதாக அப்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதியளித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முழு அறிக்கையையும் இங்கே கிளிக் செய்து படிக்கவும்.
2022 ஜனவரியில் கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் நடந்த குடியரசு தின நிகழ்வின் போது அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீடியோ, இது சமீபத்திய சம்பவம் என்று தவறான கூற்றுடன் பகிரப்படுவது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முடிவு:
2022 ஜனவரியில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் நடந்த குடியரசு தின நிகழ்வின் போது அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றியதற்கு எதிரான போராட்டத்தின் வீடியோ, சமீபத்திய அம்பேத்கர் சர்ச்சையில் அமித் ஷாவுடன் இணைத்து தவறான கூற்றுடன் பயனர்களால் பகிரப்படுவது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.