For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மூதாட்டியின் கன்னத்தில் பளார்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

04:52 PM May 04, 2024 IST | Web Editor
மூதாட்டியின் கன்னத்தில் பளார்    இணையத்தில் வைரலாகும் வீடியோ
Advertisement

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது,  காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டி, மூதாட்டியின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.  ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில்,  ஏற்கெனவே 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.  மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  தெலங்கானா மாநிலத்தில் 2024 மக்களவைத் தேர்தல் வருகின்ற 13ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ்,  பிஆர்எஸ்,  பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  இதையடுத்து,  தெலங்கானா மாநிலம்,  நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் டி. ஜீவன் ரெட்டி போட்டியிடுகிறார்.  இவர் நேற்று,  ஆர்மூர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தார்.  அப்போது நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த களத்துக்கு சென்ற ஜீவன் ரெட்டி,  அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் வாக்கு சேகரித்தார்.

இதையும் படியுங்கள் : தாமதமாக வந்ததால் மோதல்! தலைமுடியைப் பிடித்து சண்டை போட்ட ஆசிரியைகள்!

அதற்கு அந்த மூதாட்டி,  அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில்,  காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததாகவும்,  ஆனால் தனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.  தனக்கு 'ஓய்வூதியம் கிடைக்காததால்,  வரும் மே 13ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் நாங்கள் 'தாமரை' சின்னத்துக்கு தான் வாக்களிப்பேன் என அந்த மூதாட்டி தெரிவித்தார்.  இதனை கேட்டதும் ஜீவன் ரெட்டி ஆத்திரமடைந்து அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்தார்.  இதனால் அங்கிருந்த பெண்களுக்கும் அவர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement