For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

5.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்!

07:32 AM Jun 05, 2024 IST | Web Editor
5 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி   வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்
Advertisement

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அபார பெற்றி பெற்றார். 

Advertisement

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.  இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. குறிப்பாக திருவள்ளூர் மக்களவை தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் போட்டியிடாமல், அதன் கூட்டணிக் கட்சிகளை இங்கு களமிறக்கியது.. அதன்பேரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வான கு.நல்லதம்பி, பா.ஜ.க சார்பில் பொன் வி.பாலகணபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி.தமிழ்மதி உள்பட 14 பேர் போட்டியிட்டன்ர்.

இதில், திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பாஜக வேட்பாளர் பொன் பால கணபதியை விட 5,70,566 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முதலில்  காங்கிரஸ் கட்சியின் 'சென்ட்ரல் வார் ரூம்' தலைவராகவும் சசிகாந்த் நியமிக்கப்பட்டார். பின்னர் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியான பயன்படுத்தி மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Tags :
Advertisement