தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம்
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ள சூழலில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்க்கொள்ள முழுவீச்சுடன் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் பொறுப்பாளர், இணை பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை – பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி!
அதன்படி தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 மத்திய அமைச்சர்களை பாஜக களமிறக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.