For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

யு.ஜி.சி.யின் புதிய விதி - திமுக மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் !

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் மாபெ­ரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
09:06 AM Feb 06, 2025 IST | Web Editor
யு ஜி சி யின் புதிய விதி   திமுக மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
Advertisement

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

இதை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் யு.ஜி.சி., திருத்த விதி­களை கண்­டித்து இன்று காலை 10 மணிக்கு தி.மு.க.        மாண­வரணி சார்­பில் மாபெ­ரும் ஆர்ப்­பாட்­டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்­வாதி கட்­சித் தலை­வர் அகி­லேஷ் யாதவ் மற்­றும் இந்­தியா கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் தலை­வர்­கள், திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் சுதீப் பந்தோ பாத்­யாயா, ராஷ்ட்­ரிய ஜனதா தளம் கட்சி சார்­பில் மனோஜ் குமார்ஜா, விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி சார்பில் திரு­மா­வ­ள­வன், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் ஜான் பிரிட்­டாஸ், புரட்­சி­கர சோஷி­ய­ லிஸ்ட்­டின் பிரேம சந்­தி­ரன், கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள் சார்­பில் சுப்­ப­ரா­யன், செல்­வ­ராஜ் உள்­ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags :
Advertisement