Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மக்களின் இனிமையான பயணத்திற்கு காரணமானவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை” - டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் #RahulGandhi!

03:52 PM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு, லட்சக்கணக்கான மக்களின் பயணம் இனிமையாக இருக்கக் காரணமான ஊழியர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த வாரம், டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை, ராகுல் காந்தி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உபர் கார் ஒன்றில் ராகுல்காந்தி வந்து இறங்குகிறார். சரோஜினி நகர் பேருந்து பணிமனை அருகே அவர், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் கலந்துரையாடுகிறார். அந்த வீடியோ பதிவில் ராகுல்காந்தி,

“ஒரு சில நாள்களுக்கு முன்பு, டெல்லி பேருந்தில் பயணித்த ஒரு சிறந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது. டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் உரையாடிய போது, அவர்களின் அன்றாட பணிச்சூழல் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றிய தகவல்களையும் கேட்டறிந்தேன். தங்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை, நிலையான வருமானம் இல்லை மற்றும் நிரந்தர வேலையும் இல்லை என்று மிகப்பெரிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

நிலையற்ற வாழ்க்கையால், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நிச்சயமற்ற இருளில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட ஊர்க்காவல் படையினர் தொடர்ச்சியாக கடந்த 6 மாதங்களாக சம்பளம் இல்லாமல் உள்ளதையும் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்ற புறக்கணிப்புகளால் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களைப் போலவே, டெல்லி போக்குவரத்து ஊழியர்களுக்கும் தனியார்மயமாக்கல் எனும் அச்சம் சூழ்ந்துகொண்டுள்ளது.

இதுபோன்ற மக்கள் தான் நாட்டையே இயக்குகிறார்கள். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களின் பயணத்தை எளிதாக்குகிறார்கள். ஆனால் அவர்களின் அர்ப்பணிப்புப் பணிக்கு ஈடாக அவர்களுக்கு கிடைப்பதோ அநீதிதான் என்கிறார்கள் அதிருப்தியுடன். ஒருமித்த குரலில் அவர்கள் கோரிக்கையாக கேட்பது என்னவோ, சம வேலை, சம ஊதியம், அனைவருக்கும் நீதி என்பதே. தொடர்ந்து அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியால் கனத்த இதயத்துடனும் சோகத்துடனும் மத்திய அரசிடம் கேட்பது, ‘நாங்கள் இந்த நாட்டின் நிரந்தர குடிமக்கள் என்றால், எங்கள் வேலைகள் மட்டும் ஏன் தற்காலிகமானதாக இருக்கின்றன?”

இவ்வாறு ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

Tags :
CongressDelhiDTCEmployeesINCjusticeNews7TamilRahul gandhiTransport Service
Advertisement
Next Article