"2026ல் ஒரே வெர்ஷன் தான், அது அதிமுக வெர்ஷன் தான்" - முதலமைச்சர் பேச்சுக்கு இபிஎஸ் பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலளித்து பேசினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் 1 தான். 2026-ல் திராவிட மாடல் 2.0 லோடிங்" என தெரிவித்தார். இந்த நிலையில், முதலமைச்சரின் பேச்சுக்கு இபிஎஸ் பதிலளித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “உன்ன நம்பி கூப்டதுக்கு.. உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட” – திருமண விருந்தில் கூடுதல் பன்னீர் வழங்காததால் ஆத்திரம்… மினிபஸ் ஓட்டுநர் எடுத்த அதிரடி முடிவு!
கள்ளச்சாராய ஆட்சிக்கு!
கள்ளக்குறிச்சியே சாட்சி!சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!
பெண்கள் பாதுகாப்பின்மைக்கு
அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி!போதைப் பொருள் கடத்தலுக்கு
திமுக அயலக அணியே சாட்சி!போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 29, 2025
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி! Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure. இதில் இன்று வெர்ஷன் 2.0 Loading ஆம்! 2026-ல் ஒரே வெர்ஷன் தான் - அது அதிமுக வெர்ஷன் தான்! மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு Bye Bye என்று சொல்வார்கள்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.