தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் - 11 நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி..!
தமிழக வெற்றிக்கழத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் நாளை நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நாளை 27ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சார நிகழ்ச்சி நடத்திக்கொள்ள காவல்துறையில் தவெக தரப்பு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விஜய் பிரச்சாரத்திற்கு கரூர் நகர காவல்துறை சார்பில் 11 நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் படி,
1. நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் உள்ள சென்ட்ர மீடியன் பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தல் கூடாது. மேலும் தொண்டர்கள் சென்டர் மீடியன் மீது ஏறி நிற்கக்கூடாது இவற்றை முறையாக கூட்டம் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் கவனித்து கொள்ளவேண்டும்.
2. நிகழ்ச்சி நடைபெறும் போது தங்களது தொண்டர்கள் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை நடத்த காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
3. வாகனங்கள் நிறுத்தும இடங்களை முன் கூட்டியே அறிந்து நிகழ்ச்சிக்கு அழைத்து வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்தும் இடங்களுக்கு முன்கூட்டியே சென்று முறையாக வாகனங்களை நிறுத்தும் இடத்தில் வரிசையாக நிறுத்துவதற்க்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது நிர்வாகிகள் மூலம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
4. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு மின்சாரவாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
5. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது ஏதேனும் அவசர ஊர்தி வரும் பட்சத்தில் தொண்டர்கள் மேற்படி வாகனத்திற்க்கு வழி விட வேண்டும்.
6. நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு அருகில் வணிக வளாகங்கள் மற்றும் IT நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதி என்பதாலும் மேலும் அதிகப்படியான தொண்டர்கள் கலந்து கொள்வதால் முதல் உதவி சிகிச்சை செய்வதற்க்கு முன்னேற்பாடுகள் செய்து வைத்திருக்க வேண்டும்.
7. பொதுக்கூட்டம் நடத்துவதற்க்கு முறையாக தீயணைப்பு துறையினர் சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று இருக்க வேண்டும்
8. கூட்டத்திற்கு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
9. பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதிக்கபடுகிறது. மேலும் திருக்காம்புலியூர் ரவுண்டானாவானது தேசிய நெடுஞ்சாலையில் பிற மாவட்டங்களின் முக்கிய இணைப்பு சாலை என்பதால் எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் ரோடு சோ நடத்த அனுமதி இல்லை.
10. பொதுக்கூட்டம் முடிந்த பின்பு கொடிகள் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்
11.பொதுகூட்டத்திற்க்கு அனுமதி இல்லாமல் LED திரை மற்றும் மேடை அமைக்க கூடாது, ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.