Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கமல் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை - டிடிவி தினகரன் பேட்டி!

கமல் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை, படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்திருக்கலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
12:38 PM Jun 06, 2025 IST | Web Editor
கமல் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை, படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்திருக்கலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் நடைபெற்ற அமமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,

Advertisement

"அமித்ஷா வருகை அன்று திருச்சியில் நடைபெறும் கழக நிர்வாகி பாபு இல்ல திருமண விழாவிற்கு செல்ல தேதி கொடுத்துள்ளேன், அமித்ஷா வை சந்திப்பதா, இல்லையா என்பது குறித்து தெரியவில்லை, அமித்ஷா அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செயல்பட்டு, திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி எடுத்து அதை செய்து முடித்திருக்கிறார்,

இன்னும் பிற கட்சிகள், யாரெல்லாம் திமுகவை ஆட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், திமுகவிற்கு எதிராக செயல்படுகின்ற கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவது மூலம் திமுகவை எதிர்க்கின்ற வாக்குகள் சிதறாமல், மாபெரும் வெற்றி பெற முடியும் என்பது தான் என் கோரிக்கை,

அரசியல்வாதிகள் பேசும் போது கர்நாடகவினர் அமைதியாக இருப்பார்கள், கமல் சிறந்த நடிகர், அவரே ஒரு படத்தில் நடித்து வெளியிடும் நேரத்தில், இது போன்ற கருத்துகளை அவர் சொல்லாமல் தவிர்த்திருந்தார் என்றால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், மற்றபடி அவர் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை,

தவெக வுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
amithshaBJPkamalKamalhaasankaranatakaMaduraiopinionPressMeetSasikalaThugLifettv dhinakaran
Advertisement
Next Article