Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை!” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்!

04:39 PM Jun 06, 2024 IST | Web Editor
Advertisement

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

Advertisement

டெல்லி செல்வதறாக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநிலத்ததலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அண்ணாமலை பேசியதாவது:

கோவையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்திருக்கிறார்கள். அவ்வாறென்றால் அதிமுகவை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்.  பத்தாண்டு காலமாக அதிமுகவின் ஊழலை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.  பாஜக பற்றி பேசும், எஸ்.பி.வேலுமணி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு.  இல்லை என்றால் ஒரு பேச்சு.  பாஜகவிற்கும் காலம் வரும். தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.  11.5 சதவீதம் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. கோவை அதிமுக கோட்டை என்று கூறுவார்கள்.  ஆனால் அங்கு மூன்று இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறார்கள்.

ஆளுங்கட்சியின் இடர்பாடுகள்,  பணபலம்,  படை பலம் தாண்டி கோவை சட்டமன்ற உறுப்பினர்களை தாண்டி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள்.  இந்த வாக்குகள் எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.  2019 அதிமுக ஆளும் கட்சி.  ஆனால் அன்று வரலாறு காணாத தோல்விதான் அதிமுகவுக்கு கிடைத்தது. அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. பிறகு எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும்?

வேலுமணி , எடப்பாடி பழனிச்சாமி உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது. பாஜக இருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என வேலுமணி சொல்லுவது உட்கட்சி பூசலால் தான். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளட்களின் பல்வேறு கேள்விகளுக்கு அண்ணாமலை பதில் அளித்தார். அப்போது, வாக்கு எண்ணும் மையத்திற்கு ஏன் வரவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, செய்தியாளர்களிடன் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக செய்து காட்டுவோம். படிப்படியாக தான் வெற்றியை பார்க்க முடியும். கோவை மக்களுக்கு கடமை பட்டுள்ளோம். ஆளும் கட்சிக்கு எதிராக வாக்கு அளித்து உள்ளனர். கோவை மக்களின் வாக்கு எங்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. இணை அமைச்சர் பதவி ஏற்பதாக தகவல்கள் வெளியாகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை பதில் தரவில்லை.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, புதியவர்களுக்கு மக்கள் முன்னுரிமை கொடுப்பது அதிகம் என்று கூறினார். 2026 கூட்டணி ஆட்சி தான் அமையும். அதே நேரத்தில், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது, நான் பேசுவதிலே தெரியும் என்று அண்ணாமலை கூறினார்.

Tags :
AIADMKAnnamalaiBJPEPSkovaiLoksabha Elections 2024news7 tamilNews7 Tamil UpdatesSP VelumaniTamilNadu
Advertisement
Next Article