”எனது பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது”- அண்ணாமலை பரபரப்பு..!
பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டின் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு மீது, அமைச்சர் சக்கரபாணி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது, இந்த ஊழல் புகார்களை மறைக்கும் விதமாக பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் தமிழர்கள் குறித்து பேசியதாக பொய்யான தகவல்களை முதல்வர் கூறி வருகிறார்.
திமுக அரசு திட்டமிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத் திட்டத்தை முடக்க வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் எஸ்.ஐ. ஆர் நடத்துவதற்கு விடமாட்டோம் என கூறினால் அவர்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போகட்டும். ஏனென்றால் இது இந்திய அரசியலமைப்பு எதிரானது. யாருடைய வாக்குறுமையும் பறிக்க போவதில்லை. இதைத்தாண்டி திமுக எதிர்க்கிறது என்றால், அவர்களுடைய போலி வாக்காளர்கள் வெளியே வருவார்கள் என்ற பயம் தான்.
பிரதமர் ஒரு தூய அரசியலை கொடுப்பார் என ஏற்கனவே இருந்த பணியை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். தமிழகத்தில் நல்ல அரசியலை கொடுக்க வேண்டும். அரசியல் கட்சியிலிருந்து மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். இல்லையைன்றால் சமூக ஆர்வலராக மக்கள் பணி செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேணடும் என காத்துக் கொண்டிருக்கிறேன். பதவி எல்லாம் வெங்காயம் மாதிரி. பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமில்லை. ஆனால் அதிமுகவில் உள்ள தலைவர்கள் என்னை திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அமித்ஷாவிடம் நான் கொடுத்த வார்த்தைக்காக கட்டுபட்டு இருக்கிறேன். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது” என்று தெரிவித்தார்.
 
  
  
  
  
  
 