For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சிவகாசி சுற்றுச்சாலைக்கும் திமுகவிற்கும் சம்பந்தமே கிடையாது" - ராஜேந்திர பாலாஜி!

சிவகாசி சாட்சியாபுரம் பாலத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அதிமுக ஆட்சியில் தான் என்று அதிமுக முன்னால அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
10:50 AM Jul 30, 2025 IST | Web Editor
சிவகாசி சாட்சியாபுரம் பாலத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அதிமுக ஆட்சியில் தான் என்று அதிமுக முன்னால அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
 சிவகாசி சுற்றுச்சாலைக்கும் திமுகவிற்கும் சம்பந்தமே கிடையாது    ராஜேந்திர பாலாஜி
Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "4 ஆண்டுகள் திமுக ஆட்சியில் சிவகாசி பகுதிக்கு இதை செய்தார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

Advertisement

சிவகாசி சாட்சியாபுரம் பாலத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அதிமுக ஆட்சியில்தான். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது எனது முயற்சியில் பணம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணை காப்பி என்னிடம் உள்ளது, தேர்தல் நேரத்தில் அதை நான் வெளியிடுவேன்.

சிவகாசி சுற்றுச்சாலைக்கும் திமுகவிற்கும் சம்பந்தமே கிடையாது. சுற்றுச்சாலைக்கு இடம் எடுத்தது அதிமுக ஆட்சியில் தான். சிவகாசி சுற்றுச்சாலைக்கு என்னுடைய இடம் 4 ஏக்கரை கொடுத்துள்ளேன். பட்டாசு ஆலை
உரிமையாளர்களிடம் பேசி இடம் வாங்கி கொடுத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement