For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜகவின் நல்லாட்சி பட்டி தொட்டி எங்கும் செல்லவேண்டும் என்பதே பிரதமரின் கனவு - அண்ணாமலை பேச்சு!

08:09 PM Feb 11, 2024 IST | Web Editor
பாஜகவின் நல்லாட்சி பட்டி தொட்டி எங்கும் செல்லவேண்டும் என்பதே பிரதமரின் கனவு   அண்ணாமலை பேச்சு
Advertisement

பாஜகவின் நல்லாட்சி பட்டி, தொட்டியெல்லாம் செல்ல வேண்டும் என்பது தான் பிரதமரின் கனவு என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில் என் மண் என் மக்கள் இன்று சென்னையில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க சென்னை வந்தடைந்தார். அவரை அண்ணாமலை, வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஏசி சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றனர். இவரது இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வள்ளலார் நகர், தங்க சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா, அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழா மேடையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,

“நமது நல்லாட்சி பட்டி தொட்டியெல்லாம் செல்ல வேண்டும் என்பது தான் பிரதமரின் கோரிக்கை, அவரது கனவு. கடந்த 6 மாத காலமாக என் மண், என் மக்கள் யாத்திரை நடைபெற்று வருகிறது. திமுக எத்தனையோ ஆண்டு காலம் தமிழக மக்களின் மனதை வேறுவிதமாக நினைத்தும் கூட, பாஜக தலைவர்கள் இந்த பூமியில் தேசியத்தை விதித்துக் கொண்டு வந்தார்கள்.

10 ஆண்டுகளில் நாம் செய்திருக்க கூடிய சாதனைகளை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நமது பிரதமரை 3வது முறையாக பிரதமராக ஆக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். நம்முடைய வேலை இன்னும் முடியவில்லை. 2024 இல் தமிழ்நாட்டில் இருந்து, பிரதமர் கரங்களை பெறுமளவு வலுப்படுத்த வேண்டும். நம் வேர்வையை சிந்த வேண்டும். நமக்கான பணிகள் இன்னும் இருக்கிறது.

தேசியத்தையும், ஆன்மீகத்தையும் பாதுகாக்க இந்த நேரத்தை இன்னும் கடுமையாக 60 நாட்கள் வேலை பாக்க வேண்டும். சென்னை சமீப வெள்ளத்தில் இத்தனை ஆண்டு காலமாக மக்கள் உழைத்த பணத்தை எல்லாம், திமுக ஆட்சி செய்ய தெரியாத இந்த ஆட்சியில் பல கோடி ரூபாயை இழந்து வருகிறோம். சென்னையில் இருக்கும் 3 எம்பிக்கள் ஒரு குடும்பத்தின் மைந்தர்களாக இருக்கிறார்கள்.

வெள்ள காலத்தில் இந்த தொகுதியில் எம்பி தயாநிதி மாறன் ஒரு 10 பேருக்கு கூட சாப்பாடு போடவில்லை. சென்னையில், தண்ணீர் சுகாதாரமாக இல்லை, சாலை சீராக இல்லை. சென்னையை அடிப்படையில் இருந்து மாற்ற வேண்டிய காலம் இது. தமிழக அரசு சென்னைக்குள் யாத்திரைக்கு அனுமதி தரவில்லை. பாஜக உங்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறது. பிரதமர் வழியில் ஒரு புதிய சென்னையை கட்டமைக்க காத்திருக்கிறது.

அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்ணியமிக்க அற்புதமான எண்ணம். அவரை பாராளுமன்றத்தில் வைத்து உங்கள் தோப்பனார் பணம் என சொல்கிறார். அவருக்கு நான் பதில் சொல்கிறேன். இன்றைக்கு நீங்கள் அரசியலில் இருக்கும் ஒரே காரணம், முரசொலி மாறன். அவரின் பையன் என்பதால் தான். நீங்கள் ஊழல் செய்ததால் தான் அமைச்சர் பதவியில் இருந்து வெளியே வந்தீர்கள். 

நான் அவரை பாத்து கேட்கிறேன். உங்க தோப்பனார் சொன்னாரா? உங்களை அமைச்சர் பதவியில் இருந்து வாருங்கள் என? சென்னை மாநகரில் 3 எம்பிக்கள் நரேந்திர மோடியின் கனவை நினைவாக்கும் எம்பிக்களாக வர வேண்டும்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement