For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே அரசு” - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ் நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தமிழ் நாடு அரசு தான் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு என பெருமிதம் தெரிவித்துள்ளர்.
10:38 AM Aug 06, 2025 IST | Web Editor
தமிழ் நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தமிழ் நாடு அரசு தான் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு என பெருமிதம் தெரிவித்துள்ளர்.
“இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே அரசு”   முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
Advertisement

தமிழ் நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு தமிழ் நாடு அரசு தான் என பெருமிதம் தெரிவித்துள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

Advertisement

"இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாடு அரசு. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது.இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில்; அப்போது கருணாநிதி ஆட்சி! இப்போது அவர் வழிநடத்தும் ஆட்சி! இரண்டுமே திமுக ஆட்சி!. 2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது; "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666) என்னும் திருக்குறளையும் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement