Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே இலக்கு" - அண்ணாமலை ஆவேச பேச்சு

திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே இலக்கு என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 
05:32 PM Jun 08, 2025 IST | Web Editor
திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே இலக்கு என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 
Advertisement

மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் உள்பட 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இதையும் படியுங்கள் : “சூரியன் உதிக்கிறதோ இல்லையோ.. தாமரை மலர்ந்தே தீரும்” – தமிழிசை செளந்தரராஜன் பேச்சு

இந்த நிகழ்ச்சி மேடையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,

"180 ரூபாயக்கு கீழ் வருமானம் பெற்றவர்களின் சதவீதம் 16.2% ஆகி இருந்தது. ஆனால் 10 ஆண்டுகளில் இந்த சதவீதத்தை 10% ஆக மாற்றியவர் பிரதமர் மோடி. இந்த பெருமையெல்லாம் பிரதமரையே சாரும். மக்களின் பணத்தை கொள்ளையடித்து சினிமா எடுக்க செலவு செய்கிறவர்களுக்கு எப்படி மக்களை பற்றி சிந்திக்க தோன்றும். மக்கள் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள். மக்கள் நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். எங்கேயும் யாருக்கும் நிம்மதி இல்லாத வாழ்க்கை தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நிலவுகிறது. 2026ம் ஆண்டு திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக தான் இந்த கூட்டம். திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே இலக்கு"

இவ்வாறு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags :
AmitshaAnnamalaiBJPDMKLatest NewsMaduraiNews Updatenews7 tamilPolitical NewsTN Politics
Advertisement
Next Article