"ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு, மனிதனாக மறந்து விட்டான்" - அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் "தமிழ் முழக்கம்" மேடைப்பேச்சு - ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகி சிவம், உலக தமிழ் சங்க இயக்குனர் பர்வீன் சுல்தானா சட்டமன்ற உறுப்பினர் தளபதி மற்றும் 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மின் கசிவுகள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும். இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமமானது. அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்று இருந்தால் மரத்திற்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார். முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு மனிதனாக மறந்து விட்டான்" என்று தெரிவித்துள்ளார்.