Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மதுரையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது" - எடப்பாடி பழனிசாமி!

பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
10:27 AM Oct 06, 2025 IST | Web Editor
பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பிடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மதுரை திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி, வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது.

Advertisement

புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.

சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.

இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ADMKedappadi palaniswamiEPSMaduraiMGRstatue
Advertisement
Next Article