For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஆர்எஸ்எஸ் எனும் பேரியக்கம், ஒரு வரலாற்றுத் தாக்கம்" - நயினார் நாகேந்திரன்!

நூற்றாண்டு விழா காணும் ஆர்எஸ்எஸ்-இன் வலுவான கட்டமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
11:39 AM Oct 02, 2025 IST | Web Editor
நூற்றாண்டு விழா காணும் ஆர்எஸ்எஸ்-இன் வலுவான கட்டமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
 ஆர்எஸ்எஸ் எனும் பேரியக்கம்  ஒரு வரலாற்றுத் தாக்கம்    நயினார் நாகேந்திரன்
Advertisement

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தேசத்தையும் சுயஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கொண்டு, மக்கள் பணியை மகேசன் ஆணையாக ஏற்று உழைத்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் எனும் பேரியக்கம் இன்றுடன் தனது நூறாண்டுகளை நிறைவு செய்கிறது.

Advertisement

தங்கள் மீது விழுந்த அனைத்து விமர்சனங்களையும் தகர்த்து, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தன்னலமற்ற தலைவர்களை உலகிற்குப் பரிசளித்து, இன்று நூற்றாண்டு விழா காணும் ஆர்எஸ்எஸ்-இன் வலுவான கட்டமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சுயநலமற்ற ஒழுக்கத்தின் பிம்பமாக விளங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு, நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷம். இப்படிப்பட்ட பாரம்பரியமிக்க ஒரு பேரியக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை எனது வாழ்நாள் பேறாகக் கருதுகிறேன்.

அரசியல் லாபத்திற்காகக் கொண்ட கொள்கைகளைப் பிறரிடம் அடகு வைக்கும் அமைப்புகளுக்கு மத்தியில், "அகண்ட பாரதம்" எனும் ஒற்றைச் சொல்லைத் தங்களின் உயிர் மூச்சாகக் கொண்டு ஆண்டாண்டு காலமாக உழைத்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்து சிறக்கட்டும்! ஆர்எஸ்எஸ்-இன் மக்கள் பணி தொய்வின்றி தொடரட்டும்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement