For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது" - அமைச்சர் மனோ தங்கராஜ்!

யாருடைய நம்பிக்கையையும் திராவிட கட்சிகளோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோ சிதைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
12:30 PM Sep 20, 2025 IST | Web Editor
யாருடைய நம்பிக்கையையும் திராவிட கட்சிகளோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோ சிதைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
 விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது    அமைச்சர் மனோ தங்கராஜ்
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஆட்சியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை, அதில் ஒன்றும் நாம் குறை சொல்ல முடியாது. அதை தலைவர் பார்த்து கொள்வார்.

Advertisement

அகில இந்திய அளவில் இருக்கும் கட்சி எங்களோடு கூட்டணியில் இருக்கும் கட்சி அதிலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் முடிவு செய்வார்கள். இது குறித்து யாரும் சங்கடபட ஒன்றுமில்லை.

இந்த கூட்டணி வலுவாக உள்ளது, அதனால் அவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு கண், காது, மூக்கு, வாய் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா தேர்தளிலும் இப்படி தான், அவரவர் அவர்களுடைய விருப்பதை தெரிவிப்பார்கள். அதனை தலைமை பேசி முடிவு செய்வார்கள்.

கேரளாவில் நடைபெறும் ஐயப்ப பக்தர்கள் மாநாடு குறித்த கேள்விக்கு, இது மிகவும் தவறான கருத்து. யாருடைய நம்பிக்கையையும் திராவிட கட்சிகளோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோ இதை சிதைப்பது இல்லை. அவர்கள் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி நடக்கின்றதை சிதைப்பது என்பது சொல்வதை ஏற்று கொள்ள முடியாது.

சங்கமம் மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவது தான் அரசின் கடமை. மக்கள் அதை விரும்பினால் அதை அரசு முன்னெடுக்கும். அதே போன்று திராவிட முன்னேற்ற கழகம் மாநாடு நடத்தியதை சிலர் விமர்சித்தனர். நடத்தினாலும் விமர்சனம் நடத்தாவிட்டாலும் விமர்சனம், எனவே இந்த விமர்சனத்துக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டு இருக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement