For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்" - அமைச்சர் ரகுபதி பேட்டி!

போலீசாரை தாக்கிவிட்டு செல்லும்போது தான் என்கவுண்டர் சம்பவங்கள் நடக்கிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
10:28 AM Aug 07, 2025 IST | Web Editor
போலீசாரை தாக்கிவிட்டு செல்லும்போது தான் என்கவுண்டர் சம்பவங்கள் நடக்கிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்    அமைச்சர் ரகுபதி பேட்டி
Advertisement

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் நலத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசியவர், "திருப்பூரில் எஸ்எஸ்ஐ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி மீண்டும் காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

Advertisement

ஆணவ படுகொலைகள் நடைபெறுவது தெரிவதில்லை ஆனால் நடந்த பின் குற்றவாளிகள் அனைவரும் கூண்டோடு தண்டிக்கப்படுகிறார்கள். போலீசாரை தாக்கிவிட்டு செல்லும்போது தான் என்கவுண்டர் சம்பவங்கள் நடக்கிறது. இல்லையென்றால் நடக்காது,வேண்டுமென்றே யாரும் என்கவுண்டர் சம்பவங்களை நடத்துவதில்லை. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு உச்ச நீதிமன்றம் 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது வரவேற்கத்தக்கது.

அரசின் திட்டங்களுக்கு முதலமைச்சரின் பெயரை அதிமுக ஆட்சிக்காலத்திலும் வைத்திருந்தார்கள். பெயர் வைப்பதில் நாங்கள் எங்களுக்காக போராடவில்லை உங்கள அதிமுகவுக்காகவும் போராடி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். குடியரசு தலைவர் என்ன முடிவு அறிவிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்த்து அதன் அடிப்படையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.

ஆணவ படுகொலைகள் நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது, குற்றம் நடந்த பின்பு கொலையாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை பெற்றுக் கொடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement