For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கருத்துக் கணிப்புகளை தேர்தல் வெற்றி பொய்யாக்கியுள்ளது! - இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து!

06:45 PM Dec 03, 2023 IST | Web Editor
கருத்துக் கணிப்புகளை தேர்தல் வெற்றி பொய்யாக்கியுள்ளது    இணை அமைச்சர் எல் முருகன் கருத்து
Advertisement

பாஜகவிற்கு இழுபறி நிலை என்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளை, தேர்தல் வெற்றி பொய்யாக்கியுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். 

Advertisement

இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகளை நாடே ஆவலுடன் எதிர்பார்த்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றிப்பெரும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன. அதோடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் வெல்லும் என்றும் கருத்துக்கனிப்புகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் கருத்துகணிப்பில் கூறப்பட்டதை போல் தெலங்கானாவில் பாஜகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அதே நேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் தோற்றுள்ளது.

இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து மத்திய அணி அமைச்சர் தொலைப்பேசி வாயிலாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் தெரிவித்த கருத்துகள் பின் வருமாறு:

பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியாக இதை பார்க்கிறோம்; இந்த தேசத்தின் சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி இது. பாஜகவிற்கு இழுபறி நிலை என்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளை, இந்த வெற்றி பொய்யாக்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக வரலாற்று சாதனை படைத்துள்ளது. I.N.D.I.A. கூட்டணி சனாதன தர்மத்தை கொச்சைப்படுத்தியதற்கு மக்கள் சரியான பாடம் கற்பித்திருக்கிறார்கள். இவ்வாறு கூறினார்.

இதை தொடர்ந்து தனது x தள பக்கத்தில் இணை அமைச்சர் எல்.முருகன் பதிவொன்றையும் வெளியிட்டார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி இமாலய வெற்றி. தொடர்ந்து 5-வது முறையாக மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடித்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் வரலாற்றுச் சாதனையை மக்கள் தீர்ப்பாக வழங்கியிருக்கிறார்கள் அங்கு இருக்கக்கூடிய பழங்குடியின மக்கள் பாரத பிரதமர் மீது வைத்துள்ள நம்பிக்கையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

உழைப்பு ஒன்றை மூலதனமாகக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கு உறுதுணையாக இருக்கும் எங்கள் தேசிய தலைவர் நட்டா, எங்களை பாதுகாக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்களை வழிநடத்தும் பிரதமர் மோடிக்கு  இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு தொண்டனுக்கும் கொடுத்திருக்கிறது.

இவ்வாறு தனது x தள பக்கத்தில் இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement