For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேகதாது அணை விவகாரம் - தமிழ் நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்...!

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
04:07 PM Nov 13, 2025 IST | Web Editor
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம்   தமிழ் நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Advertisement

அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

”தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமல், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த  திமுக அரசின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் டெல்லியில் 1.2.2024 அன்று நடைபெற்றபோது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடகம் கோரியபோதே, திமுக அரசு வாய்மூடி மௌனியாக இருந்ததையும் நான் கண்டித்துள்ளேன். அனைத்தையும் மீறி, உச்சநீதிமன்றத்தில் இதுபோன்றதொரு தீர்ப்பு வருவதற்கு, கர்நாடகாவில் உள்ள தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும். தமிழகத்தின் உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement