Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திமுக அரசின் பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது" - எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

04:00 PM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

திமுக அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது;  மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

Advertisement

தமிழக சட்டசபையில் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி  சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் பேசியதாவது:

திமுக அரசின் இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது. மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த பொழுது ஏழை மக்களுக்கு பசியை போக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். 3 ஆண்டுகளாக மாநகராட்சி உட்புறசாலைகள் சீர் செய்யப்படவில்லை. கிராமப்புற சேலைகளை சீர் செய்ய ஆயிரம் கோடி தான் ஒதுக்கி உள்ளனர். இந்த பட்ஜெட்டில் தடுப்பணைகள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படும் அது போல் தான் இந்த பட்ஜெட்டிலும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 8,33,367 கோடி கடன் இந்த ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் உள்ளது. அன்று தமிழ்நாட்டை கடனாளி ஆக்கி விட்டனர் என்று கூறினர். மேலும் கடன் மேலாண்மையை சரி செய்ய நிபுணர் குழுவும் அமைத்தனர். ஆனால் இப்பொழுது அந்த குழுவை தேட ஒரு குழு போட வேண்டிய நிலையே உள்ளது. நிதிநிலை வரவு செலவு திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளது, முழுமையாக என் அறிக்கையில் குறிப்பிடுகிறேன்.

கனவு பட்ஜெட்,  கானல் நீர் மக்களுக்கு பயன் தராது.  இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து வருடா வருடம் கடன் பெற்று தான் இந்த ஆட்சி நடத்தி வருகிறது. த மிழக அரசு அனைத்திலும் நம்பர் ஒன் என்று தெரிவிக்கிறது.  ஆனால் நாட்டிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலத்தில் முதலிடம் ஆக உள்ளது தமிழ்நாடு.

ஜிஎஸ்டி,  பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அதிக வருமானம் வருகிறது.  அதிமுக ஆட்சியை விட இப்பொழுது அதிக வருமானம் தான் வருகிறது  ஆனால் எந்த திட்டங்களும் முறையாக அறிவிக்கப்படவில்லை.  தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கியதோடு, அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தோம்.

அதிக திட்டங்களை கொண்டு வந்து அதிக சாலைகளை அமைத்துக் கொடுத்தோம். இப்பொழுது என்ன புதிய திட்டங்கள் உள்ளது.  பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை ஒன்றுமே இல்லை.  தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஆயிரம் கோடியில் இருந்து 600 கோடியாக குறைத்துள்ளனர்.

நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை நிறுத்தி அதற்கு செலவழித்த நிதியை நிறுத்தி,  அதற்கு வேறு பெயர் கொடுத்து வேறு திட்டத்திற்கு செயல்படுத்துகிறார்கள்.  2021-22-இல் புதிய பேருந்துகள் வாங்குவதாக சொன்னார்கள், அடுத்த ஆண்டும் அதையேதான் சொன்னார்கள்,  அடுத்த ஆண்டும் இதைத்தான் சொல்வார்கள். இது ஏட்டு அளவில் தான் இருக்கும் நடை முறைக்கு வராது.

யார் ஆட்சியில் இருந்தாலும் இதே நிலைமைதான். இருக்கிற நிதியை வைத்து யார் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம். நாங்கள் கொண்டு வந்த உயர்ந்த நிலையை தான் தமிழகத்தில் இப்பொழுது தக்க வைத்து வருகிறார்கள். அதையே சில நேரங்களில் அவர்களால் செய்ய முடியவில்லை.

2035 இல் அடைய வேண்டிய இலக்கை 2019 இல் ஏற்படுத்தினோம்,  கல்வி வளர்ச்சி பெறுவதற்கு அதிமுக நடவடிக்கை எடுத்தது.  கற்போர் எண்ணிக்கை உயர்ந்தது.  வார்த்தை ஜாலத்தில் நன்றாக உள்ளது நடைமுறைக்கு வந்தால் தான் பயன் அளிக்கும். இந்த ஆட்சி வந்த பிறகு என்னென்ன தொழில் வந்துள்ளது எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக முதலீட்டாளர்கள் மாநாடு போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் எத்தனை தொழிற்சாலைகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை இன்னும் கொடுக்கப்படவில்லை . கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று இளைஞர்களிடம் வாக்குகளை பெற்று விட்டு இன்றுவரை திமுக அரசு அதை செய்யவில்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags :
#MMKADMKAIADMKBest CM Best BudgetBJPBudgetBudget 2024CongresscpicpimDMKedappadi palaniswamiEPSKMDKMDMKMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesPMKTamilnadu budgetThangam thennarasuTN Assembly 2024tvkVCK
Advertisement
Next Article