"மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை அதிகாரிகள் செய்தது தவறு" - செல்லூர் ராஜூ!
மதுரை மாடக்குளம் கண்மாயில் நடைபெற்று வரும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மாடக்குளம் கண்மாய் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாய் விளங்குகிறது.
இங்கு நிறைகின்ற தண்ணீர் ராமர் பெருமாள் கோயில், தெப்பக்குளம், முத்துப்பட்டி கண்மாய் வரை செல்கிறது. நிலையூர் கண்மாய் 25 கோடியில் தடுப்பணை அமைத்த பிறகு மேற்கு தொகுதி ஆரம்பிக்கும் தாராப்பட்டி, குடிமங்கலம் தொகுதி துவரிமான், இதுபோன்ற பகுதிகளில் பெரிய கண்மாய் ஏரிகள் எல்லாம் முழுமையாக வகிக்கிறது.
மாடக்குளம் கண்மாய் 375 ஏக்கர் பரப்பளவு கொண்டது, 75% பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. 50% மத்திய தொகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. நாகமலை புதுக்கோட்டை அதிகாரி விக்னேஸ்வரனின் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்.
ஒதுக்கப்பட்ட நிதி 17 கோடியே 60 லட்சம் ரூபாய். 167 மில்லியன் கொள்ளளவு கொண்ட கண்மாய் பாசன பரப்பளவு உள்ளது. கண்மாய்க்கு இலங்கை ஆஸ்திரேலியாவில் இருந்து பறவைகள் வருகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கண்மாய் தூர் வாரி, மூன்று முறை குடிமராமத்து செய்து தண்ணீர் நிரம்பி இருந்தது. தற்போது இல்லை, கண்மாய்க்கரை சாலை அமைக்கும் பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. விஜய் அரசியலுக்கு இப்போது தான் வந்திருக்கிறார். புதுமுகம் அனைவரும் விமர்சனம் செய்து விட்டார்கள்.
மதுரையில் வண்டியூர் அம்மா திடலில் அம்மா வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. தவெக தலைவர் மாவட்டம் வாரியாக சென்றால் நன்றாக இருக்கும். உயிர்ப்பலி ஏற்படும் விதமாக யாரு தவறு செய்தாலும் அவர் குடும்பம் விளங்காது. மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறை அதிகாரிகள் செய்தது தவறு. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜய் காலம் தாமதமாக வந்தது ஒரு காரணம், அகலமான இடத்தை பிரச்சாரத்திற்கு கொடுத்திருக்க வேண்டும் இனிமேல் இந்த தவறு நடக்கக்கூடாது. இதில் ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆணை அமைத்தது, உடனுக்குடன் நீதியரசர் எப்படி நியமிக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.