Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நிறைவடைந்தது ஜனநாயகத் திருவிழா - மாலை 6மணியுடன் 7ம்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

06:25 PM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

மக்களைவைத் தேர்தலுக்கான 7ம் கட்ட வாக்குப் பதிவு மாலை 6மணியுடன் நிறைவடைந்தது.

Advertisement

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.  இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் இதில் மொத்தம் 485 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6மணிக்கு நிறைவடைந்தது. இதனுடன் 18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தது.

7 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசமென மொத்தம் 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  இன்றைய தேர்தலில் வாக்களிக்க 5.24 கோடி ஆண்கள், 4.82 கோடி பெண்கள், 3,574 மூன்றாம் பாலினத்தவர் எனமொத்தம் 10.06 கோடி பேர் தகுதி பெற்றிருந்தனர்.  1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

சுமார் 11 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இதேபோல ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் இறுதிகட்டமாக 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வரும் ஜுன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Tags :
7th Phase ElectionBJPElection2024INDIA AlliancendaVOTING
Advertisement
Next Article