For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி.. அதில் ஒன்று அதிமுக..” - எடப்பாடி பழனிசாமி பேச்சு!

09:25 PM Mar 30, 2024 IST | Web Editor
“தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி   அதில் ஒன்று அதிமுக  ”   எடப்பாடி பழனிசாமி பேச்சு
Advertisement

புதிதாக ஒரு கட்சி முளைத்துள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் என்றுமே இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி என்றும் அதில் ஒன்று அதிமுக என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவகொழுந்தை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மஞ்சகுப்பம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

“வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு கொட்டும் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். கடலூரில் மக்கள் கூட்டம் கடல் போல் உள்ளது. வேட்பாளர் வெற்றி பெற இக்கூட்டமே சான்று. எதிரிகளை வீழ்த்த சிவக்கொழுந்து நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக - தேமுதிக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. தமிழ்நாட்டில் மும்முனை போட்டி விளைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பல பிரச்சனைகள் உள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுக என்எல்சி நிறுவனத்தை நிலத்தை எடுக்க அனுமதிக்கவில்லை.

புதிதாக ஒரு கட்சி முளைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் என்றுமே இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி. அதில் ஒன்று அதிமுக. சிவக்கொழுந்து வெற்றி பெற்றால் மக்களில் குரலாக மக்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவார். இந்த தேர்தலும், வெற்றியும் மிக முக்கியம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டை மறந்து விடுகின்றனர். நாம் தனித்து நிற்கின்றோம். சொந்த காலில் நின்கின்றோம்.

தமிழ்நாட்டை மாற்றாந்தாய் பிள்ளை போல் பார்க்கின்றனர். அதனால் தான் பாஜகவை விட்டு வெளியே வந்து தன்னந்தனியாக நாம் போட்டியிடுகின்றோம்.தமிழ்நாடு முதலமைச்சர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செயல்படுகின்றார். 2026 ல் அதிமுக ஆட்சி மலர வேண்டும். அதற்கு இந்த தேர்தல் அடிப்படையான தேர்தல். 

திமுகவின் 560 அறிவிப்புகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 98% நிறைவேற்றி விட்டேன் என்கிறார். பொய் சொல்வதில் நோபல் பரிசு கொடுத்தால் அது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் கிடைக்கும். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்ற சதுரங்க வேட்டை படத்தின் வசனத்தை போன்று திமுக செயல்பட்டு வெற்றி பெற்றது.

பொங்கல் தொகுப்பு வழங்குவதிலும் ஊழல் செய்த கட்சி திமுக. வெல்லம் வியாபாரம் செய்தவன் நான். வெல்லத்திலும் வெளிமாநிலத்தில் வாங்கி ஊழல் செய்தனர். அப்படி செய்தால் தான் கமிஷன் அடிக்க முடியும். ஸ்டாலின் அவர் தந்தைக்கு ரூ.80 கோடியில்
பேனாவை கடலில் வைக்க போகின்றாராம். கார் பந்தைய போட்டி நடத்த ரூ.45 கோடி வீணடித்த அரசு திமுக. கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக. இது போன்று செலவு செய்வதை மக்கள் உணர வேண்டும். இதற்கு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பதிலளித்தே ஆக வேண்டும்" இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து, புதுச்சேரி மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து உப்பளம் புதிய துறைமுக மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,

“புதுச்சேரி மாநிலத்திற்கு மத்தியில் இருந்து என்னென்ன திட்டம் கொண்டுவர முடியுமோ அதை நமது வேட்பாளர் பெற்று தருவார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் அழுத்தம் தருவார். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அந்தஸ்த்து பெறாததால் மாநில நிதி பகிர்வு இல்லாமல் புதுச்சேரி வளர்ச்சி பெறவில்லை. 40 ஆண்டுகளாக திமுக, காங்கிரஸ். என்.ஆர்.காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சி செய்கின்றார்கள். ஆனால் மாநில உரிமையை மீட்டெடுக்க இவர்களால் முடியவில்லை” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
Advertisement