For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தூய்மை பணியாளர்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல்" - ஜி.கே வாசன் பேட்டி!

சென்னையில் ரிப்பன் மாளிகையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல் என்று ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
12:40 PM Aug 14, 2025 IST | Web Editor
சென்னையில் ரிப்பன் மாளிகையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல் என்று ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
 தூய்மை பணியாளர்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல்    ஜி கே வாசன் பேட்டி
Advertisement

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கூட்ட அரங்கில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார் பேசினார். அப்போது "2026 சட்டமன்ற தேர்தலில் எம்பிஏ கூட்டணி அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் சார்ந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கான சூழலை களத்தில் ஏற்படுத்த தமிழ் மாநில காங்கிரஸின் தேர்தல் செயல்பாடுகளை துவங்கியுள்ளோம்.

Advertisement

தஞ்சை மாவட்டத்தில் மிக சிறப்பாக சென்ற வாரம் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று தென் மாவட்ட உங்களுடைய இளைஞரணி கூட்டம் தேர்தல் விபத்தின் அடிப்படையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் சென்னை மண்டலத்தில் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மக்கள் தலைவர் மூப்பனாருடைய பிறந்த தின விழா விவசாய தினமாக விவசாயிகளின் குறை கேட்கும் நாளாக விவசாயிகள் தங்கள் கருத்தை எடுத்துக் கூறும் வகையில் கோவையில் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

28ஆம் தேதி காலை ராமநாதபுரத்தில் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளேன். 28ம் தேதி மாலை தென்காசியில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளேன். 30ம் தேதி சென்னையில் ஐயா மூப்பனாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது. அதில் கலந்து கொள்கிறேன். செப்டம்பர் மாதத்தில் நான்கு மண்டலத்தில் ஒரு மண்டலத்தை இரண்டு அல்லது மூன்றாக பிரித்து கூட்டம் நடத்த உள்ளோம். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத்திற்குள் 8 மண்டல இளைஞர் அணி கூட்டம் நடத்த உள்ளோம்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை, அரசுடைய செயல்பாடுகள் போதுமானதல்ல, மக்கள் 20 போக்கை கையாண்டு கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் கட்சிகள் எங்களோடு ஒன்று சேர்ந்து ஆட்சியை அகற்றக் கூடிய இலக்கை உறுதி செய்ய வேண்டும்.

தேர்தலுக்கு பிறகு ஒரு நல்ல சூழல் ஏற்படும், தற்போது அந்த சூழல் இல்லாத காரணத்தால் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. 13 நாட்களாக சென்னையில் ரிப்பன் மாளிகையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல்.

இந்திய கூட்டணியில் இருக்கும் மற்ற பிராந்திய கட்சிகள் எல்லாம் காங்கிரஸ் கட்சியை தாண்டி பயணம் செய்ய தொடங்கி விட்டார்கள். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஒருவர் இறந்து போனவர்களுடன் நான் தேநீர் அருந்துகிறேன் என்று கூறுவது மிகவும் வருத்தமான செய்தி. நாம் ஏன் தேவை இல்லாமல் தேர்தல் ஆணையத்தை குறை கூற வேண்டும்,

மதுரை மாநகரில் வரி ஏய்ப்பு என்ற பிரச்சினை மிகப் பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களையும் வரி பிரச்சனை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கிறது. இதற்கு தீவிர விசாரணை தேவை, உண்மை நிலை வெளிவர வேண்டும், மக்களுடைய வரிப்பணம் வீணாக போகக்கூடாது என்பதை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று எங்கள் சார்பில் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு தெரு நாய்கள் பாதுகாப்பான இடத்திலேயே இருக்க வேண்டும் என்பது சரியான தீர்ப்பு என்பது எங்களுடைய கருத்து. தெரு நாய், வெறி நாய்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் மக்கள் நடமாடத்திலே இருக்கக் கூடாது அதற்குண்டான பணிகளை டெல்லி மாநகரம் மட்டுமல்ல இந்தியாவினுடைய எல்லா நகரத்திலும் ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தமிழ் மாநில காங்கிரசின் வேண்டுகோள்.

கனிம வள கொள்ளைகள் தடுக்கப்பட வேண்டும், அதற்குண்டான சட்டங்களை இன்னும் அதிகப்படுத்த வேண்டும், தெரியப்படுத்த வேண்டும், முழுமைப்படுத்த வேண்டும். சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டின் காரணமாக அரசு பல தொழிற்சாலைகளை தொடர்ந்து சோதனை செய்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற உறுதி செய்ய வேண்டும்.

கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்கு எதிர்காலத் திட்டத்திற்கு கல்விக் கொள்கையை கொண்டு இரு மொழி கல்வியின் கொள்கையை அரசு கைவிட வேண்டும். மக்களை ஏமாற்றி அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை.

தென் மாநிலங்களிலே சட்டம் ஒழுங்கில் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்பது வேதனைக்குரிய ஒன்று. தொடர்ந்து பாராளுமன்றத்தை ஒரு வாரமாக கூச்சல் குழப்பம் செய்து பாராளுமன்றத்தை முடக்கியது. ஜனநாயகத்திற்கு எதிரானது. தொகுதி வாக்காளர்களுக்கு எதிரானது தொகுதி வளர்ச்சிக்கு எதிரானது. ஆர்ப்பாட்டம் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தவறான வாக்குறுதிகளை கொடுத்த மக்களை ஏமாற்றுகிறார்கள்.

தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படாத போக்கு. இதற்கு எடுத்துக்காட்டு என்றால் ஏழை எளிய நடுத்தர மக்கள் ஆட்சியாளர்களுக்கு நிச்சயம் வாக்களிக்க கூடாது என்பதுதான் எங்களுடைய வேண்டுகோளாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement