For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சோதனை!

12:18 PM Jan 11, 2024 IST | Web Editor
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சோதனை
Advertisement

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று (ஜன.11) ஆளுநர் ஆய்வு நடத்த வரும் நிலையில் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 6 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்
ஜெகநாதன்,  பதிவாளர் தங்கவேல் ஆகியோர் பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை
தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது எட்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.  இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (ஜன.11) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு சென்று,  ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார். இதனை எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: தங்கம் விலை சரிவு! எவ்வளவு தெரியுமா?

இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க பல்கலைக்கழகத்திற்கு முன்பு மாணவ அமைப்புகள் குவிந்து வருகின்றனர்.  இந்த
நிலையில் சேலம் மாநகர உதவி காவல் ஆணையர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் குழுக்களாக பிரிந்து காலை 10 மணி அளவில் சோதனையில் ஈடுபட்டனர்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் அலுவலகம்,  திட்டம் மற்றும் விரிவாக்க அலுவலகம்,  தமிழ் துறை,  பொது அறிவு அலுவலகம்,  கணினி துறை,  நிதி அலுவலகம் என 6 இடங்களில் சோதனை நடத்தினர். கடந்த வாரம் 8 இடங்களில் இரண்டு நாட்கள் சோதனை செய்து முடித்தது.  இந்த நிலையில் மீண்டும் இரண்டாம் கட்டமாக சோதனை செய்தனர்.

Tags :
Advertisement