For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விரைவில் ஓடிடியில் வெளியாகும் ‘மகாராஜா’? எப்போது தெரியுமா?

02:14 PM Jul 03, 2024 IST | Web Editor
விரைவில் ஓடிடியில் வெளியாகும் ‘மகாராஜா’  எப்போது தெரியுமா
Advertisement

‘மகாராஜா’ ஜூலை 19ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.  இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’,  ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.  இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின்  ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக  ‘மகாராஜா’ திரைப்படம் உருவானது.  குரங்குபொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.  இப்படத்தில் அனுராக் காஷ்யப்,  மம்தா மோகன்தாஸ்,  நட்டி, முனிஷ்காந்த்,  சிங்கம் புலி,  பாரதிராஜா,  வினோத் சாகர்,  பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  உலகம் முழுவதும் இப்படம்  ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், இப்படம் ஜூலை 19ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement