For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு நம்பர் ஒன்" - திருச்சி சிவா!

மேலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளையாக மூர்த்தி செயல்பட்டு வருகின்றார் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
12:45 PM Sep 27, 2025 IST | Web Editor
மேலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளையாக மூர்த்தி செயல்பட்டு வருகின்றார் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
 பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு நம்பர் ஒன்    திருச்சி சிவா
Advertisement

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வணிகவரித்துறை மற்றும் பத்திர துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா, நீதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் தானாம் தென்னரசு, "தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்திய தொகுதி மேலூர். இந்த தேர்தலில் மேலூர் தொகுதி அதிகமான வாக்குகளில், திமுக வெற்றி பெறும்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனை தொடர்ந்து திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பேசுகையில், "பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவில் தமிழ்நாடு நம்பர் ஒன் ஆக செயல்படுகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, ED திடீர் ஆய்வு விசாரணை என்ற பெயரில் இது போன்ற ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.

அனைத்து வாக்கு சாவடிகளையும், நாம் அனைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். நாம் தூங்கும் போது நம்மை தாக்கும் முயற்சியை எதிரி மேற்கொள்ளுகின்றார். ஒவ்வொரு வாக்கும், பொன்னான வாக்குகள், அதை நாம் பெற்றால் தான் நம் நாட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும்.

நாம் கட்சி நிர்வாகிகள், ராணுவ வீரர்கள் போல செயல்படவேண்டும். மேலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளையாக மூர்த்தி செயல்பட்டு வருகின்றார். வாக்கு சாவடியில் எந்த ஒரு குளறுபடியும் இல்லாமல் செயல்படவேண்டும் எனவும் பத்து நாள் கழித்து மீண்டும் வருவேன். மேலூர் பகுதியில் எந்தனை புதிய வாக்காளர்கள் உள்ளனர் என்பதை ஆய்வு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement