For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் | மார்ச் மாதம் 8 அல்லது 9 ஆகிய தேதிகளில் வெளியாக வாய்ப்பு?

10:02 PM Mar 05, 2024 IST | Web Editor
தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல்   மார்ச் மாதம் 8 அல்லது 9 ஆகிய தேதிகளில் வெளியாக வாய்ப்பு
Advertisement

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 8 அல்லது 9 ஆகிய தேதிகளில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் திமுகவைத் தவிர அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் உறுதி செய்யப்படாத நிலையில் இருந்து வருகிறது.  தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான பேரத்தையும் தொகுதிப் பங்கீடுகளையும் செய்ய முடியாமல் இரண்டு கட்சிகளும் தவித்து வருகின்றன.  இந்த நிலையில் பிரதமர் மோடியும் ஒரு வாரத்தில் இரண்டு முறை தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்.

எனவே தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் ஜான் பாண்டியன்  உள்ளிட்டவர்களின் கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. அவர்களுடன் தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இன்னொருபுறம் பாஜகவின் தேசிய தலைமையோ அதிமுகவைவும்  மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருவதாக பலரும் கரூத்து தெரிவித்துவருகின்றனர்.

தமிழகத்தில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணி தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு சென்றுள்ளாராம். யாரை எல்லாம் அணுக வேண்டும், எங்கே பேச வேண்டும் என்று சில ஆலோசனைகளை  தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அவர் வழங்கியிருக்கிறாராம்.  இதனையெடுத்தே இன்னும் இரண்டு நாட்களில் பாஜக தலைமையிடம் இருந்து கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நாளை டெல்லி செல்லவுள்ளனர்.  பாராளுமன்ற தேர்தல் கருத்துக் கேட்புக் குழு தயாரித்துள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் நாளை டெல்லி தலைமையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மாநில தேர்தல் குழுவில் அடங்கிய மூத்த நிர்வாகிகள் நாளை டெல்லி தலைமையிடம் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை ஒப்படைத்த பின், இறுதிக்கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல்  8 அல்லது 9 ஆகிய தேதிகளில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement