For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லாத பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

09:55 PM Jun 04, 2024 IST | Web Editor
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லாத பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Advertisement

நாடாளுமன்ற தேர்வு முடிவுக்கான வாக்குகள் எண்ணப்பட்ட போது கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு எண்ணும் மையத்திற்கு ஒருமுறை கூட செல்லவில்லை.

Advertisement

18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே முன்னிலை பெற்றது. தற்போது வரை வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குகள், தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் எண்ணப்பட்டன. பொதுவாக வாக்குகள் எண்ணப்படும் போது வேட்பாளர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்வது வழக்கம்.

ஆனால் 12 மணி நேரத்துக்கு மேலாகியும் தமிழ்நாடு பாஜகத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை வாக்கு எண்ணிக்கை மையத்தின் பக்கமே செல்லவில்லை. பிரதான வேட்பாளர்களான திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுக சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையை பார்வையிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து தொடர் பின்னடைவை சந்தித்து வருவதால்,  வீட்டில் இருந்துகொண்டே அண்ணாமலை வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவில்லை. இன்றைய தினம் அண்ணாமலையின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement