For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மனைவியை கொலை செய்த கணவன்... சிவகாசியில் பரபரப்பு!

02:07 PM Dec 24, 2024 IST | Web Editor
மனைவியை கொலை செய்த கணவன்    சிவகாசியில் பரபரப்பு
Advertisement

சிவகாசியில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (29). இவரது மனைவி ராம் கலா (39). இவர்களுக்கு கோகுல் (11) என்ற மகனும் பவித்ரா (6) என்ற மகளும் உள்ளனர். பாலாஜி தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பாலாஜியும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பாலாஜியின் மனைவி தனது குழந்தைகளுடன் பவளமலைப்பட்டியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். பாலாஜி சென்னையில் வசிந்து வந்தார்.

இந்நிலையில் ராம்கலாவின் சகோதரர் நிச்சயதார்த்ததிற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலாஜி சென்னையிலிருந்து பவளமலைப்பட்டிக்கு வந்தார். அப்போது பாலாஜி மற்றும் அவரது மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பாலாஜி காய்கறி வெட்டும் கத்தியால் ராம்கலாவின் கழுத்தை அறுத்தார்.

இதில் ராம்கலா படுகாயமடைந்த நிலையில் அவரின் உறவினர்கள் ராம்கலாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ராம்கலா உயிரிழந்தார். இதனையடுத்து பாலாஜி எம். புதுப்பட்டி காவல் நிலையத்தில் ஆஜரானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement